உள்ளடக்கம்

Mohamed - FaZlullah

Admin

அறிமுக வரிகள்

 

அபரிமிதமான தகவல் தொழினுட்ப வளர்ச்சியின் மூலம் நாளாந்தம் உலகு தன்னை அழகு படுத்திக்கொண்டு வருகிறது.
விரல் நுனுயின் அசைவில் உலகினை விழிகளின் முன் நிறுத்தி விசித்திரம் செய்து கொண்டிருக்கும் அறிவியலின் சாதனைகளோடு நாமும் இணைந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
அந்த வகையில் eEravur.lk என்னும் நாமம் தாங்கிய இணையத்தளம் ஒன்றினை அறிமுகம் செய்து வைப்பதில் மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

ஏறாவூர் பிரதேசத்தை மாத்திரம் மையமாகக் கொண்டு செயற்படவிருக்கும் இவ்விணையத்தளமானது இலங்கைத் தீவில் பிரதேச ரீதியாக அமையவிருக்கும் முதலாவது இணையத்தளம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

பிறந்த மண்ணின் பெருமைகளையும் , சிறப்புக்களையும் வெளி உலகுக்கு எடுத்துச் செல்வது மாத்திரமன்றி மற்றும் பல பெறுமதியான சேவைகளையும் வழங்குவதற்கு இந்த இணையத்தளம் எதிர்பார்த்துள்ளது.

ஏறாவூரின் அரசியல், ஆன்மீகம், கல்வி, விளையாட்டு , சுகாதாரம்,சமூக நலன் என பல துறை சார்ந்த தகவற் பெட்டகமாக இவ்விணையத்தளம் பணியினை தொடங்கவிருக்கிறது. அத்துடன் எமதூரின் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அமைப்புக்கள் போன்ற வற்றின் நாளாந்த செயற்பாடுகளையும் அவசியமான தகவற்குறிப்புக்களையும் தெரிந்துகொள்ள இந்த இணையத்தளம் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கவிருக்கிறது.

இதன் மூலம் கால வீண்விரயம், அநாவசியச் செலவு போன்ற சிரமங்களைக் குறைத்து பாதுகாப்பினையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்பதும் இந்த இணையத்தளத்தின் எதிர்பார்ப்புக்களில் ஒன்றாகும்.

பக்கச் சார்பின்மை, நடு நிலையான போக்கு, விரைவான சேவை, பெறுமதியான தகவற் திரட்டு, ஆவணப்படுத்தல், எவரையும், எதனையும் இழிவு படுத்தாத நிலைப்பாடு போன்ற பண்புகளை துணையாகக் கொண்டு இந்த இணையத்தளம் இயங்கும் என்ற உறுதியுடன் உங்கள் அனைவரினதும் முழுமையான ஆதரவினையும், தொடர்ச்சியான ஒத்துழப்பினையும் வேண்டி நிற்கின்றது.

———————————-

ADVISORY COMMITTEE HEAD

Mr. S.H. Rifaydeen (Retired Principal)

(அறிமுக வரிகள் மற்றும் நன்றி மலர்கள்)

ADVISORY COMMITTEE

Mr.H.M. Mohamed Razeem ( Eastern University)

ADVISORY COMMITTEE

Mr.M.Y.Ahmed Ammar (Student)

ஒத்துழைப்பு நல்கியவர்கள்

ஜனாபா. நிஹாரா மௌஜூத்

(பிரதேச செயலாளர் – ஏறாவூர் நகர்)

ஜனாப். ஏ.சீ.அஹமட் அப்கர்

(உதவிப் பிரதேச செலாளர் – ஏறாவூர் நகர்)

ஜனாப். எம்.எச்.எம். ஹமீம் (விஷேட ஆணையாளர்)

(ஏறாவூர் நகர பிரதேச செயலகம்)

ஜனாப். சட்டத்தரணி ஏ.எல்.எம். முனீர்

(பிரதேச செயலகம் ஏறாவூர் நகர்)

ஜனாப். எம். நாசர்

(ஆசிரியர் , ஊடகவியலாளர்)

 

தகவல்களை வழங்கியவர்கள்.

அல்ஹாஜ். மு.அ.இப்ராஹிம் (பஹ்ஜி)

ஓய்வு பெற்ற ஆசிரியர்

ஜனாப். எஸ்.எச். அஹமட் லெப்பை (ஏறாவூர் தாஹிர்)

(ஓய்வு பெற்ற ஆசிரியர்)

அல்ஹாஜ். ஏ.எம். ஜுனைத்

(ஓய்வு பெற்ற அதிபர்)

அல்ஹாஜ்.எம்.எச்.ஏ.அப்துல் ஹலீம்

(ஓய்வு பெற்ற ஆசிரியர்)

ஜனாப். எம்.வை.எம். இப்ராஹிம் (கவிஞர் யூவன்னா)

ஓய்வு பெற்ற ஆசிரியர்)

அல்ஹாஜ். என்.எல்.எம். மன்சூர்

(ஓய்வு பெற்ற அதிபர்)

ஜனாப். முஹம்மது முஹைதீன்

(ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்)

ஜனாப். பாறூக்

(ஓய்வு பெற்ற ஆசிரியர்)

ஜனாப். ஹயாத்துக் குட்டி இறம்ழான்

ஜனாப். எம்.எச்.எம்.சத்தார்

(ஆசிரியர்)

இப்ராஹிம் அஹமத் மௌலவி

(ஜாமியா நிழாமியா ஏறாவூர்)

ஜனாப். முஹம்மத் இஸ்மாயில் அமீன்

(கிழக்குப் பல்கலைக் கழக ஆய்வூகூட உதவியாளர் – ஓய்வு)

 

ஜனாப். மு.மு.நௌஷாத்

(ஏறாவூர் பிரதேச செயலகம்)

நூல் பிரதிகளை வழங்கியோர்

 • ஜனாப். எஸ்.எச். அஹமட் லெப்பை (ஏறாவூர் தாஹிர்)
 • அல் ஹாஜ். எம்.எச்.எம். ஹலீம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்)
 • ஜனாப். எம்.வை.எம். இப்ராஹிம் (யூவன்னா – ஓய்வு பெற்ற ஆசிரியர்)
 • கவிஞர் மீராமுஹைதீன் மருதூர் ஜமால்தீன்
 • ஜனாப். ஏ.சீ.அப்துர் ரகுமான்
 • ஹாஜியானி நஷீரா எஸ் ஆப்தீன் (SLEAS)
 • ஜனாப். ஏ.றியாஸ் (SLTES)
 • ஹாஜியானி டாக்டர் ஜலீலா முஸம்மில்
 • அல்ஹாஜ் கே.நௌசாத் (ஆசிரியர்)
 • ஜனாப். முஹம்மத் அன்சார்

ஆதரவு வழங்கியோர்.

 • அல்ஹாஜ். அஷ்ஷெய்யது ஷரீப் அலி ஹஸனுல் அன்வர் மௌலானா ஸைபுல்லாஹுல் காதிரி அல் ஹஸனி வல் ஹுஸைனி குருநாதர்.
 • ஹாஜியானி மஹுமூது லெப்பை – புஹாரியும்மா
 • ஜனாப். என்.எம். ஜாபீர் (பிரதேச செயலகம் – ஏறாவூர்)
 • ஜனாப். றமீஸ் (YSO)
 • ஜனாப். மிஹ்ழார் (Co-oP Eravur)
 • ஜனாப். யூ.எல். சபீர் (Co-oP Eravur)
 • ஜனாப். நஜிமுதீன் (SSO)
 • கே.எம்.எஸ். சாஹுல் ஹமீத் (ஏறாவூர் பிரதேச செயலகம்)
 • ஜனாப். வெள்ளத் தம்பி றிபாய்தீன் (இலங்கை துறைமுக அதிகார சபை )

விஷேட நன்றிகள் “ஏறாவூர் வரலாறு” ஆய்வுமைய்யக் குழுவினர்களுக்கு.

நன்றி மலர்கள்

ஏறாவூரின் பல்துறை சார்ந்த ஆவணக்களஞ்சியமாகவும், தகவல் திரட்டு மைய்யமாகவும் ஓர் இணையத்தளம் உருவாக்கப்படல் வேண்டும் என்பது எங்களது நீண்ட கால கனவாகும். பல்வேறுபட்ட சிக்கல்களை தாண்டி பல மாதகால உழைப்பிற்குப் பின் eEravur.lk என்னும் இணையத்தளம் பரிணமிப்பதன் மூலம் எங்கள் கனவு நனவாகப் போவதில் பரவசம் கொள்கிறோம்.

இந்த அரிய முயற்சிக்காக நாங்கள் அணுகிய போதெல்லம் ஆதரவளித்து ஆலோசனைகளையும், அறிவுறைகளையும் பகிர்ந்து உற்சாகப்படுத்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைக் காணிக்கை ஆக்குகின்றோம்.

ஷோபனம் கூறி வாழ்த்திடுவோம்

eஏ றாவூர்

வந்த பாதை திரும்பிப் பார்க்கும்

வரலா றொன்றின் பதிவு வேண்டும்

எந்த நாளில் என்ன வென்று

எமக்குக் கூறும் ஏதும் வேண்டும்!

இறக்கை கட்டிப் பறந்தி டலாம்

எல்லா இடமும் பார்த்தி டலாம்

திறப்பே இன்றித் திறந்து திறந்து

தேவை யெல்லாம் பெற்றி டலாம்!

சுழன் றடித்தது சூறா வளி

சோகந் தந்தது சுனாமி யலை!

இழப்புத் தந்தது பயங்கர வாதம் !

இன்னும் தொடருது கொரோனா யுகம்!

இருந்த பலரும் இறந்து விட்டார்

இருப்போ ரெல்லாம் மறந்து விட்டார்

வருந்தும் பலரும் வாழ்ந்து போக

வரலா றெல்லாம் மடிந்து போகும்!

வந்தது வந்தது இணையம் வந்தது

வரலாற் றோடு இணைய வந்தது

eஏ றாவூர்” இலங்கிடும் நாமம்!

இணைந்து கொள்வம் இன்றே நாமும்!

இரண்டா யிரத்து இருபத்து மூன்று

இருபத் தொன்று செப்டம் பரில்

eஏ றாவூர் இணையம் வந்தது

எமதூர்க் கென்று இணையம் வந்தது.

உலக மெல்லாம் விளங்கும் வண்ணம்

ஊரை யுயர்த்தித் தோளில் வைத்தார்

இலகு வாக விரலின் நுனியில்

எல்லாம் பெறவும் வரமும் தந்தார்!

அரசியல் கல்வி பொருளா தாரம்

அறிவியல் மற்றும் ஆன்மீ கமும்

விரவிக் கிடக்குது பூகோ ளத்தில்

விபரம் தருமே eஏ றாவூர்

இழந்தோம் கல்வி பொருளா தாரம்

இனிய உயிர்கள் விபரம் எல்லாம்

அளந்து அளந்து அடுக்கி வடிவாய்

அழகாய்த் தருமே   eஏ றாவூர்

எல்லா ருமே எழுந்து நின்று

இருகை தட்டி வரவேற் போம்!

சொல்ல ருஞ்சேவை eஏ றாவூர்

சோபனங் கூறி வாழ்த்தி டுவோம்.


கவிஞர் ஏரூர் யூவன்னா

Related Posts