bg_image
img
img
ABOUT US
Explore Eravur அறிமுக வரிகள்
ABOUT US

அபரிமிதமான தகவல் தொழினுட்ப வளர்ச்சியின் மூலம் நாளாந்தம் உலகு தன்னை அழகு படுத்திக்கொண்டு வருகிறது.
விரல் நுனுயின் அசைவில் உலகினை விழிகளின் முன் நிறுத்தி விசித்திரம் செய்து கொண்டிருக்கும் அறிவியலின் சாதனைகளோடு நாமும் இணைந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
அந்த வகையில் eEravur.lk என்னும் நாமம் தாங்கிய இணையத்தளம் ஒன்றினை அறிமுகம் செய்து வைப்பதில் மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

ஏறாவூர் பிரதேசத்தை மாத்திரம் மைய்யமாகக் கொண்டு செயற்படவிருக்கும் இவ்விணையத்தளமானது இலங்கைத் தீவில் பிரதேச ரீதியாக அமையவிருக்கும் முதலாவது இணையத்தளம் என்பதில் பெறுமிதம் கொள்கிறோம்.

 

பிறந்த மண்ணின் பெறுமைகளையும் , சிறப்புக்களையும் வெளி உலகுக்கு எடுத்துச் செல்வது மாத்திரமன்றி மற்றும் பல பெறுமதியான சேவைகளையும் வழங்குவதற்கு இந்த இணையத்தளம் எதிர்பார்த்துள்ளது.

ஏறாவூரின் அரசியல், ஆன்மீகம், கல்வி, விளையாட்டு , சுகாதாரம்,சமூக நலன் என பல துறை சார்ந்த தகவற் பெட்டகமாக இவ்விணையத்தளம் பணியினை தொடங்கவிருக்கிறது. அத்துடன் எமதூரின் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அமைப்புக்கள் போன்ற வற்றின் நாளாந்த செயற்பாடுகளையும் அவசியமான தகவற்குறிப்புக்களையும் தெரிந்துகொள்ள இந்த இணையத்தளம் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கவிருக்கிறது.

இதன் மூலம் கால வீண்விரயம், அனாவசியச் செலவு போன்ற சிரமங்களைக் குறைத்து பாதுகாப்பினையும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என்பதும் இந்த இணையத்தளத்தின் எதிர்பார்ப்புக்களில் ஒன்றாகும்.

பக்கச்சார்பின்மை, நடுனிலையான போக்கு, விரைவான சேவை, பெறுமதியான தகவற் திரட்டு, ஆவணப்படுத்தல், எவரையும், எதனையும் இழிவு படுத்தாத நிலைப்பாடு போன்ற பண்புகளை துணையாகக் கொண்டு இந்த இணையத்தளம் இயங்கும் என்ற உறுதியுடன் உங்கள் அனைவரினதும் முழுமையான ஆதரவினையும், தொடர்ச்சியான ஒத்துழப்பினையும் வேண்டி நிற்கின்றது.

team image
Advisory Committee
Niamath M Faizal
team image
ADVISORY COMMITTEE
MM.Abdul Wajith
team image
ADVISORY COMMITTEE
HMM.Raseem
team image
ADVISORY COMMITTEE
MY.Ahmed Ammar
Advisory Committee
Mr.