ஏறாவூர் 1ம் குறிச்சி தைக்கா வீதியில் அமைக்கப்பட்டுள்ள இப்பள்ளிவாயல் அஹமது லெப்பை போடியாரினால் நிர்மாணிக்கப்பட்டது. இதற்காக மர்ஹூம் மாக்கான் மாக்கார் (பாராளுமன்ற உறுப்பினர்) அவர்க்ளினால் நிதியுதவி வழங்கப்பட்டது. 1978ஆம் ஆண்டு இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தினால் இப்பள்ளிவாயல் சேதமுற்றது. இதனை புனர்நிர்மாணம் செய்ய ஜனாப். எஸ்.முஹம்மது சாலி , மர்ஹூம் எஸ். ஸம்சுதீன் (ஆதிபர்) ஆகியோர் கொண்ட குழு இதனை புனர் நிர்மாணம் செய்தது. இதற்கு மர்ஹூம் பரீட் மீராலெப்பை அவர்களும், எறாவூரில் வசித்த கொழும்பைச் சேர்ந்த பீ.ரீ.எம். மொஹைதீன் ஆகியொரும் பெரிதும் உதவினர். பின்பு இப்பிரதேச மக்களின் பாரிய பங்களிப்புடன் அலஹாஜ் ஏ.எஸ். இஸ்ஸதீன் (அதிபர்)  அவர்களின் தலைமையில் ஏர்படுத்தப்பட்ட நிருவாகத்தினர் இப்பள்ளிவாயலுக்குரிய அடிப்படை வசதிகளை செய்தனர்.

பின்பு ஸதகா பௌண்டேசன் அமைப்பினரால் அப்பள்ளி வளாகத்தினுல் புதிய பள்ளிவாயல் நிராமனிக்கப்பட்டு முஹையத்தீன் அப்துல் காதர் ஜீலானி வாளியப்பா ஜும் ஆ மஸ்ஜித் என தலைவர் ஜனாப் ஹனீபா பஷீர் மற்றும் ஜனாப் அலியார் அன்சார் ஆகியோரது தலைமையைக் கொண்ட குழுவினரால் பெயர் மாற்றம் பெற்றது.

Related Posts