ஏறாவூரில் மரியாதைக்குறிய குடும்பத்தில் பிரந்த மீராலெப்பை வலியுல்லாஹ் அவர்கள் குணத்தாலௌம், நடத்தையாலும் ஒழுக்கசீலராக விள்ங்கினார்கள். ஏறாவூர் மக்களின் கண்ணியத்திற்கும், மரியாதைக்குமுரிய பெருந் தலைவராய் ஏறாவூரை ஆண்டார்கள். இவரது நேர்மை, நம்பிக்கை, நீதியான வழி நடாத்துதலைக் கண்ட ஆங்கிலேயர்கள் இவருக்கு “முஹாந்திரம்” பட்டம் வழங்கி கௌரவித்தார்கள்.

இறைநேசர் பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்களிடமிருந்து பைய்யத் பெற்ற பின் இவர்களுக்கு விஷக்கடி வைத்தியம் கைவரப் பெற்றது. 1954 இல் இவர்கள் வபாத்தான பின்னர் இவர்கள்து குடும்ப உறவினர் ஒருவரது கனவில் தோன்றி ” எனது கப்ரில் நடப்பட்டுள்ள மீஷான் கட்டை மூலம் பயன்பெற்றுக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தாரகள்.

அன்றிலிருந்து இறை நாட்டப்படி எண்ணற்ற மக்கள் இன, மத, மொழி பேதமின்றி இக்கபுறடியை தேடிவந்து பயன் பெற்றுச் செல்கிறார்கள்.

அண்மையில் வெளி நாட்டவர்கள் ஆய்வுக்காக் வந்த்போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களையும் கீழே காணலாம்.