மனிதக் கணக்கில் வாழ்வு பெரிது

காலக் கணக்கில் வாழ்வு சிறிது.

தகவல்/ஆக்கம் : எச்.எம்.முஹம்மது றஸீம்.

1972.08.10 அன்று சின்னத்தம்பி மக்பூல் – முஹம்மது பாத்தும்மா ஆகியோருக்கு 6வது புதல்வராக பிறந்த இவர் 1990 காலப்பகுதியில் தனது சமூகத்தின் பாதுகாப்பிற்காக தனது பெற்றோரின் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தன்னுடைய உயிரைத் துச்செமென மதிக்காது ஊர்காவற்படையில் தன்னை இணைத்து பின்னர் உத்தியோக பூர்வமாக இலங்கைப் பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டார்.

அக்கலாத்திலே தமிழீழ விடுதலைப் புலிகள், பொலிஸாரை குறிப்பாக முஸ்லிம் பொலிஸாரின் வீடுகள் மற்றும் அவர்கள் அன்றாடம் நடமாடித்திரியும் பகுதிகளில் தீவீரமாக கண்காணித்து படுகொலை செய்துவந்த கால கட்டத்தில் தனது இருப்பு கேள்விக்குறியான நிலையில் ஊருக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

பின்னர், பொலிஸ் சேவையில் ஈனைந்த இவர் பொத்துவில் பகுத்யில் கடமை புரிந்த சந்தர்ப்பத்தில், அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ்.எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளாஹ் அவர்களது முயசியினால் ஏறாவூருக்கு இடமாற்றம் பெற்று வந்தார்.

இலங்கைப் பொலிஸ் சேவையில் தன்னுடைய ஆரம்பப்பணியினை பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்த இவர், பின்னர், மின்னேரி,வெலிகந்தை,கொழும்பு போன்ற  பகுதிகளிலும் சேவையாற்றிய காலத்தில் மோட்டார் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தராகவும் , Sergeant ஆகவும் பதவியுயர்வு பெற்றார்.

கடந்த ஓராண்டு காலமாக வெலிகந்தை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் நிலையில் நேற்று (30.09.2023) அதிகாலை 3.00 மணியளவில் கடமை முடிந்து தனது ஓய்வரையில் காயங்களுடன் சடலமாக கிடப்பதாக பணியிலிருந்த பொலிஸார் கண்டறிந்திருந்தனர்.

இதன் பின்னனியில் இருப்பது என்ன?

காலை 7.00 மணியளவில் மர்ஹூம் மக்பூல் முஹம்மத் ஹனீபா  அவர்கள் விபத்துக்குள்ளானதாக அங்கு கடமையிலிருந்த பொலிஸார் ஏறாவூரிலுள்ள அவரது வீட்டுக்கு அறிவித்ததன் அடிப்படையில் அவரது குடும்பத்தார் உடனடியாக குறித்த இடத்துக்கு சென்றிருந்த வேளையிலே அங்கு விபத்துள்ளானவரை பார்ப்பதற்கு அனுமதி தரப்படவில்லை. ஆதலால் அங்கு சென்றிருந்த மர்ஹூம் மக்பூல் முஹம்மத் ஹனீபா அவர்களின் குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. பின்பு அங்கிருந்த சில சக பொலிஸ் உத்தியோகத்தர்களின் தகவல்களின் அடிப்படையில் அவர் மரணித்து விட்டதாக அவர்களது குடும்பத்திற்கு அறியக் கிடைத்தது.

மதியம் 1:30ற்கு அங்கிருந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் நீதவான் , DIG மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் அழைத்து வரப்பட்டு அவரது ஓய்வறை திறக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அச்சந்தர்ப்பத்தில் அவரது உறவினர்களுக்கும் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டபோது அங்கு வலது முழங்கையில் தோட்டா துழைத்து வெளியேறியதைப்போன்ற அடையாளத்துடன் இரத்தக் காயத்துடன் , அங்கிருந்த யன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு இரத்தம் வெளிச்சுவரிலே சிதறிக்காணப்பட்டதுடன், அவரது படுக்கை மெத்தையிலும், கொழுவப்பட்டிருந்த அவரது சீருடையிலும் இரத்தக் கறைகள் படிந்திருந் நிலையில் தரையில் மரணித்த நிலையில் அன்னாரது ஜனாஸா கானப்பட்டது.

குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்த நீதிபதியும், சட்ட வைத்திய அதிகாரியும் இம்மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருந்ததோடு அவரது கைகளின் மணிக்கட்டுக்களும், கால்களின் மணிக்கட்டுக்களும் தடவியல் பரிசோதனைக்காக மஞ்ஞள் நிற கவரினால் கட்டப்பட்ட பின்னர், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக ஜனாஸா பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலையில் இன்று 01.10.2023 வரை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை.

இத்துக்ககர நிகழ்வினால் அன்றிரவு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்காலிக பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

நம் சமூகம் செய்ய வேண்டியது என்ன ?

 • இந்த மரணத்தின் பின்னனியின் உண்மைத் தன்மையை அறிய நீதியும், நியாயமுமான வெளிப்படையான அறிக்கையைக் கோரி ஊரிலுள்ள சமூக சார்பு அமைப்புக்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் அத்தோடு இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவும் அரசாங்கத்திற்கு ஆவண செய்யவேண்டும்.
 • இந்த சமூகத்திற்காக 3 தசாப்தங்களுக்கு மேலாக உழைத்த அன்னாருக்காக பிரார்த்தனை செய்வதுடன் , முடியுமானவரை அன்னாரின் ஜனாஸா நல்லடக்கத்திலும் கலந்து கொள்வது அன்னாருக்குச் செய்யும் நன்றி உபகாரமாக இருக்கும்.

இறைவா! இவரை மன்னிப்பாயாக!

இவருக்கு அருள் புரிவாயாக!

இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக!

இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக!

வெண்மையான ஆடையை அழுக்கிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திருந்து சுத்தம் செய்வாயாக!

ஆமீன் , ஆமீன் , ஆமீன் 🤲

 1. Anonymous

  October 1, 2023

  ஆமீன்

 2. e-eravur-admin

  October 2, 2023

  ஆமீன்

Post a comment

Your email address will not be published.

Related Posts