ஏறாவூரின் கல்வி வளர்ச்சியில் காத்திரமான வகிபாகத்தை பெற்றிருக்கும் மட்/அலிகார் தேசிய பாடசாலையானது 1912 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

கிராமப் பாடசாலை” என அழைக்கப்பட்டு பின்னர் “கனிஷ்ட பாடசாலை“, “சிரேஷ்ட பாடசாலை” , “முஸ்லிம் மகா வித்தியாலயம்” , “அலிகார் மகா வித்தியாலயம்“, “அலிகார் மத்திய கல்லூரி” , “அலிகார் தேசிய படசாலை” என படிப்படியாக தரமுயர்ந்து இன்று ஒரு நூற்றாண்டு மற்றும் தசாப்ததைக் கடந்து தனித்துவம் மற்றும் பாரம்பரியத்துடன் திகழ்கிறது.

ஏறாவூரின் பெரும்பாலான ஆளுமைகளை உருவாக்கிய கல்விக் கருவரையான மட்/ அலிகார் தேசிய பாடசாலை இன, மத பேதமற்ற அடிப்படையிலே சகல மாணாக்கர்களியும் உள்ளடக்கிய பன்மைத்துவமிகு பாடசாலையாவதுடன்  மருத்துவர்கள், பொறியியளாலர்கள், வணிகவியலாளர்கள், அரச துறை அதிகாரிகள், புத்திஜீவிகள், அரசியல்வாதிகள், கல்விமான்கள் மற்றும்  வாழ்க்கைத் திறனை மேம்படுத்தக்கூடியவர்கள் என்று எண்னிலடங்கா பல்துறையாளர்களை இச்ச்மூகத்திற்கு தந்த பெருமையும் அதிகூடிய பங்கு இப்பாடாசலைக்கே உரித்தானது.

கடந்த 2012 ஆம் ஆண்டு தன்னுடைய 100 வது அகவையை எட்டிய மட் / ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையானது, தேசியம் பிரமிக்கும் வகையிலே தன்னுடைய அகவைத் தினத்தை நம்மால் மறக்க முடியாது. இந்நிகழ்விலே அப்போதைய மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்ததோடு, கௌரவ அதிதியாக அப்போதைய கல்வி அமைச்சர் திரு பந்துல குணவர்த்தன அவர்களோடு உள்ளூர் அரசியல்வாதிகளும், பல பிரமுகர்களும் கலந்து சிறப்பிதிருந்தனர்.

மேலும் இந்நிகழ்விலே கௌரவ ஜனாதிபதி அவர்களால் 100 வது ஆண்டு தினத்தை ஆவணப்படுத்தும் வகையில் உத்தியோகபூர்வ தபால் முத்திரை ஒன்றும் வெள்யீட்டு வைக்கப்பட்டது.

அதிபர்களாக கடமையாற்றியோர் விபரம்

 • தலைமை ஆசிரியர் . திரு.  கே. சங்கரப்பிள்ளை 1912 – 1928
 • தலைமை ஆசிரியர் . திரு.  சிவசுப்ரமணியம் 1928 – 1933
 • தலைமை ஆசிரியர் . திரு. சண்முக சுந்தரம் 1933 – 1939
 • தலைமை ஆசிரியர் . திரு. பரராஜசிங்கம் 1939 – 1943
 • தலைமை ஆசிரியர் . திரு. எஸ். தம்பி ராஜா 1943 – 1961
 • அதிபர் :மர்ஹூம் . எம்.ஏ.சம்சுதீன் 1961 – 1963
 • அதிபர் : மர்ஹூம் . எம். எஸ். மரைக்கார் தம்பி 1963 – 1967
 • அதிபர் : மர்ஹூம் . ஜே.எம்.எம்.அப்துல் காதர் 1967 – 1968
 • அதிபர் : ஜனாப் . எம்.கே.எம். இஸ்மாயீல் 1968 – 1970
 • அதிபர் : மர்ஹூம் . யூ.எல்.தாவூத் 1970 – 1973
 • அதிபர் : அல்ஹாஜ் . யூ.எல்.எம். ஜெய்னுதீன் 1977 – 1980
 • அதிபர் : மர்ஹூம் . யூ.எல்.தாவூத் 1980 – 1990
 • அதிபர் : அல்ஹாஜ். யூ.எல்.எம். ஜெய்னுதீன் 1990 – 1999
 • அதிபர் : மர்ஹூம் . யூ.எச். முஹம்மத் 1999 – 2011
 • அதிபர் : அல்ஹாஜ். ஏ.நூர் முஹம்மத் 2011 – 2013
 • அதிபர் : அல்ஹாஜ். ஏ.எஸ்.இஸ்ஸதீன் 2013 – 2014
 • அதிபர் : அல்ஹாஜ் : எஸ். அப்துல் நஜீப் 2015 – 2021
 • அதிபர் : ஜனாப் : எம்.எம். மௌஜூத் 2021 தற்போது வரை

புகைப்படத் தொகுப்புக்கள்

Related Posts