இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது நமது நாட்டில் அத்தியவசிய உணவுகளுக்கான தட்டுப்பாடு நிலவியது. கள்ளச் சந்தை வியாபாரத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு நமது நாட்டில் பல்வேறு இடங்களில் அரசாங்கத்தினால்  ஐக்கிய பண்டசாலைகள் நிர்மாணிக்கப்பட்டன.

திரு. ஆர்.சீ.எஸ்.குக் அவர்கள் கிழக்கு மாகாணத்திற்கான உதவிக் கூட்டுறவு ஆணையாளராகப் பணியாற்றிய போது ஏறாவூர் பிரதேசத்திற்கும் ஒரு சமாசம் இருக்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து ஏறாவூருக்கான ஐக்கிய பண்டசாலையை அமைத்தார்.

1944 இல் இப்பண்டகசாலை பதிவு செய்யப்பட்டது. இப்பண்டகசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இதன் நிருவாகிகளாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டு இருந்தனர்.

தலைவர் :  திரு.ஜே.கே.சீனித்தம்பி

உப தலைவர்: மர்ஹூம் ஐ.எல்.இஸ்மாயில் ஆலிம்

செயலாளர் : திரு. கே.கனகரத்தினம்

பொருளாளர் : திரு. டீ. வீ. இராசையா

பின்னர்

தலைவர் :  திரு. கே.பொன்னுத்துறை JP

உப தலைவர்: மர்ஹூம் சீ. அஹமது லெப்பை போடியார்

செயலாளர் : ஜனாப். எம். அலியார்

1959.03.20 அன்று அப்போதைய உணவு அமைச்சினுடைய திட்டத்தின் படி பல நோக்கு சங்கங்கள் ஸ்தாபிப்பதை கருத்திற்கொண்டு ஏறாவூர் ஐக்கிய பண்டக சாலை சமாசம் , பல நோக்குச் சங்க சமாசமாக பதிவு செய்யப்பட்டது.

13.09.1959 மேற்குறிப்பிட்ட நிருவாகத்தின் கீழ் ஏறாவூர் பிரதான வீதியில் (தற்போதைய ப.நோ.கூ.சங்க வைத்தியசாலைக் கட்டிடம்) காணி வாங்கப்பட்டு சங்க நிதியில் ரூபா 125,000/- செலவில் நிர்மாணிகப்பட்டு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அப்போதைய செலாளர் ஜீ.டீ. சொய்சா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

1971.01.29 ஆம் திகதி அன்று ஏறாவூரிலே இயங்கிய 12 சிற்றளவு கூட்டுறவுச் சங்கங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஏறாவூர் ப.நோ.கூ.சங்கம் 23.03.1971 அன்று இயங்கத் தொடங்கியது.

1990 இல் இடம்பெற்ற இன வன்செயலைத் தொடர்ந்து ஏறாவூர் ப.நோ.கூ.சங்கத்திலே பணியாற்றிய தமிழ் ஊழியர்கள் 1993.01.01 அன்று ஏறாவூர் தெற்கு ப.நோ.கூ.சங்கத்தை தனியாக பிரித்து உருவாக்கிக் கொண்டனர்.

ஏறாவூர் ப.நோ.கூ.சங்கம் 2002, 2003,2004 ஆகிய ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த சங்கமாக தெரிவு செய்யப்பட்டதோடு 2003 இலே அகில இலங்கை ரீதியாக சிறப்பாக இயங்கும் 20 சங்கங்களில் ஒன்றாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஏறாவூர் ப.நோ.கூ.சங்கத்தின் தலைவராக இதுவரையிலே பதவி வகித்தவர்கள்

திரு. ஆர். ராஜ ரட்ணம் 1971.03.20 – 1971.07.15

மர்ஹூம். எம்.ஏ.சீ.ஏ.றகுமான் 1971.07.16 – 1977.08.27

திரு.கே.தர்மலிங்கம் 1977.08.28 – 1977.12.20

மர்ஹூம் எம்.கே.எஸ்.இப்ராகிம் 1977.12.21 – 1979.02.28

மர்ஹூம் யூ.எல்.தாவூத் 1979.03.01 – 1980.05.28

மர்ஹூம் எஸ்.ஏ.ஆர். ஸாஹிர் மௌலான 1980.05.29 – 1981.06.11

மர்ஹூம். எம்.ஏ.சீ.ஏ.றகுமான் 1981.06.12 – 1986.06.08

மர்ஹூம் எஸ்.ஏ.ஆர். ஸாஹிர் மௌலானா  1986.06.09 – 1987

மர்ஹூம். ஏ.எம்.ஹனீபா 1987 – 1987.12.08

மர்ஹூம். எம்.ஏ.சீ.ஏ.றகுமான் 1987.12.09 – 1990.08.02

மர்ஹூ. யூ.எல்.எம்.ஹனீபா 1990.08.23

மர்ஹூம். ஏ.எம்.ஹனீபா 1993.10.15 – 1997.06.13

அல்ஹாஜ் ஏ.எல்.ஏ.கபூர் 1997.06.14 – 1998.03.11

அல்ஹாஜ் எம்.எல்.றெபுபாசம் 1998.03.12 – 1998.06.02

மர்ஹூம் எம்.சீ. உசனார் 1998.06.03 – 1998.11.02

ஜனாப்.எம்.எஸ்.கனி 1998.11.07 – 2000.10.02

மர்ஹூம். எம். ஐ. அஹமது லெப்பை 2000.10.23 – 2010 (மூன்று முறைகள்)

அல்ஹாஜ். எம்.பீ.எம்.சக்கூர் 2010 – 2021

அல்ஹாஜ் எம்.எல்.அப்துல் லத்தீப் 2021

எரிபொருள் நிரப்பு நிலையம்

1990 இல் இடம்பெற்ற இனக்கலவரத்தின் பின்னர் ஏறாவூரிலே எரிபொருள் நிரப்பு நிலையம் உருவாக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகள் பலராலும் முன்மொழியப்பட்ட நிலைஅயில் அப்போதைய ப.நோ.கூ.சங்க தலைவராக பணியாற்றிய மர்ஹூம் யூ.எல்.எம்.ஹனீபா அவர்களினதும், நிருவாக சபையினதும் முயற்சியினால் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களினது ஆலோசனாய்யின் பிரகாரம் அமைப்பதற்கான அனுமதி பெறப்பட்டது.

அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் அடிக்கல் நடப்பட்டு நிர்மாணப்பணிகள் முடிந்து 1994.11.24 அன்று அப்போதைய வர்த்தக , வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் , பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் றிஸ்வி சின்னலெப்பை பங்குபற்றுதலுடன் சிறப்பான முறையிலே திறந்து வைக்கப்பட்டது.

கூட்டுறவுச் சங்க வைத்தியசாலை

அப்போதைய ப.நோ.கூ.சங்க தலைவராக பணியாற்றிய அல்ஹாஜ். எம்.பீ.எம்.சக்கூர் அவர்களினதும், நிருவாக சபையினதும் முயற்சியினால்   இவ்வைத்தியசாலைக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு  2010.08.09 அன்று இவ்வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது.

Related Posts