சுத்தமானதும் பசுமையானதுமான ஏறாவூரை நோக்கி…எனும் இலக்கை நோக்கிய இந்த வேலைத்திட்டமானது கடந்த 2019ம் ஆண்டிலிருந்து தன்னார்வத் தொண்டர்களால் ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்றது.

மிகக்குறைந்த ஆளணிகளோடும், மிகக்குறைந்த பொருளாதார வளத்தோடும் சுத்தமானதும் பசுமையானதுமான பிரதேசம் எனும் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேலைத்திட்டத் தினால், இப்பிரதேசத்தின் பல இடங்களில் நீண்ட நாற்களாக தேங்கிக்கிடந்த குப்பை மேடுகள் அகற்றப்பட்டு, அவ்விடங்கள் சுத்தப்படுத்தப்பட்டு, அவ்விடங்களில்  மீண்டும் குப்பை , கூளங்கள் சேராமல் இருக்கும் நோக்கில், அவ்விடங்களில் பூச்செடிகள் நடப்பட்டு அப்பிரதேச மக்களே பராமறிக்குமாறு வேண்டிக்கொள்ளப்பட்டார்கள். 

இதனடிப்படையில், அவ்விடங்களில் மீண்டும் குப்பை கூளங்கள் கொட்டப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. வீடுகளின் வெளி மதிலோரங்களில் மல்லிகை மலர்ச் செடிகள் நடப்பட்டு, பிரதேசே வாசிகளும் அதனை பின்பற்றி மல்லிகை மலர்ச்செடிகளை நட்டதால், இன்று, அவைகள் அனைத்தும் பெரிதாக வளர்ந்து ஊருக்கு பசுமையையும் அழகையும் தருகின்றது. 

அத்தோடு, பெரு மரங்களை நடுவதற்கு நாம் தீர்மானித்தபோது, பொருளாதர வளம் போதாமை காரணமாக அத்திட்டம் தள்ளிப்போய்கொண்டே இருந்தது.  இருந்தும், ஊர் நலன் விரும்பிகளின் ஒத்துழைப்புடன் நூற்றுக்கணக்கான பெரு மரங்களை பாதுகாப்பு கூடுகளுடன் நட்டு வளர்த்து, பராமரித்து வருகின்றோம். 

எங்களது இலக்கு,  மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி எமது ஏறாவூர் பிரதேசத்தை “சுத்தமாகவும் பசுமையாகவும்” மாற்றுவதோடு அந்த மாற்றமானது பல ஊர்களுக்கும் பரவி , நாடு பூராகவும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதே.  இவ்விலக்கை அடைவதற்காக எமது பிரதேசத்தில் இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

மிக விரைவில் இத்திட்டமானது நாடுபூராக பரவும் என்ற திடமான நம்பிக்கையோடு அடுத்த கட்ட நகர்வுகளை ஆக்கபூர்வமாக முன்னெடுத்து வருகின்றோம். 

இத்திட்டமானது தன்னார்வ  தொண்டர்களால் குறைந்த ஆளணியோடு முன்னெடுத்துத்துச் செல்லப்படுவதால், இப்பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஏறாவூர் நகர சபை தங்களது ஆளணி உபகரணங்களை  வழங்கி  பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளது. இப்பிரேதேச மக்களும் சுயமாக முன்வந்து தங்களது உளப்பூர்வமான ஒத்துழைப்புகளை வழங்கினால், நிச்சயமாக எமது இலக்கை எமது ஊரில் அடைவதுடன், இதனை ஏனைய ஊர்களுக்கும் முன்மாதிரியாக கொண்டு சென்று, நாடு பூராகவும் இத்திட்டத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எங்களின் கனவாகும்.

வேலைத் திட்டங்கள்

10.09.2023 இற்றை வரை 76 மர நடுகைத் திட்டங்களை வெற்றிகரமாக நட்டு தங்களது சேவையை ஊருடன் மட்டுப்படுத்தமால், மாவட்ட மற்றும் மாகாண மட்டத்திலும் மற்றும் நாடு பூராகவும் கொண்டு செல்லும் பணியும் துரிதமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இவர்களால் மேற்கொள்ளப்படும் சேவைகளை இவர்களது முகநூல் வலைத்தளத்திலும் பார்வையிடலாம்.

இணைப்பு கீழே தர்ப்பட்டுள்ளது.

https://www.facebook.com/profile.php?id=100070572998376

புகைப்படத் தொகுப்பு

Related Posts