வீர பத்திர சுவாமி கோயில் (1916)

கதிர்காம யாத்திரைக்குச் சென்றவர்கள் வீர பத்திர சுவாமி விக்கிரகத்தை கொண்டு வந்திருந்தனர். வரும் வழியில் ஏறாவூரில் தரித்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதினால் அச்சந்தர்ப்பத்தில் ஏறாவூர் 5ஆம் குறிச்சி ஊர் போடியாரிடம் அவ் விக்ரகத்தை ஒப்படைத்து சென்றனர். இதனை தொடர்ந்து 1916 இல் இக் கோயில் அமைக்கப்பட்டது.

பத்திரகாளியம்மன் கோயில் (1798)

கண்டியை தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் கீழ் (1798 – 1815) மட்டக்களப்புப் பகுதி இருந்த காலத்தில் இக்கோயில் அமைக்கப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.

கணச காளிகா கோயில்

04ம் குறிச்சியில் அமைந்துள்ள இக்கோயிலானது பத்திர காளியம்மன் கோயில் போல் முக்கியத்துவமிக்கதாகும்.

அரசடிப் பிள்ளையார் ஆலயம்

1973 ஆம் ஆண்டு ஆலைய முன்றலிலே கூடப்பட்ட கூட்டத்துக்கு அமைய இக்கோயில் அமைக்கப்பட்டதோடு வருடா வருடம் மகா சிவராத்திரி , சித்திரைக்கதை , நவராத்தாரி , திருவெம்பாவை , கந்தசஷ்டி போன்ற் விழாக்களும், பூஜைகளும், விரதங்களும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.

முத்துமாரியம்மன் ஆலயம்

1935 ஆம் ஆண்டள்வில் வாவிக்கரை ஓரத்தில் இவ்வாலயம் அமையப் பெற்றதோடு பிற்பட்ட காலங்களில் இந்துக் கலாச்சார நிதி ஒதுக்கீடு மற்றும் தனவந்தர்களின் உதவியுடன் பலதடவை புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருடா வருடம் புதுப்பொழிவுடன் உற்சவமும் இடம்பெற்று பெறுகின்றது.

கருமாரியம்மன் ஆலயம்.

ஏறாவூர் 5 ஆம் குறிச்சியில் அமைந்துள்ள இக்கோயிலானது நகர சுத்திகரிப்புத் தொழிலாளர்களால் 1920 இல் உருவாக்கப்பட்டதாகும்.

Related Posts