புற்றுநோயால் (Cancer) பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இக்காலத்தில் பிந்திய நிலைப் புற்று நோய்த் தாக்கத்துக்கு உள்ளானவர்களை பராமரிக்கும் நோக்கோடும் ஏனைய வைத்தியசாலைகளில் புற்று நோய்க்காக சிகிச்சை பெறும் நோயாளர்கள் தம் உறவினரோடு தங்கியிருந்து சிகிச்சைக்காக சென்றுவருவதற்கு வசதியாகவும் ஏறாவூர் சவுக்கடி வீதியில் (மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் 12வது மைல் கல்லில் இருந்து 2.4Kmதூரத்தில்) அமைந்துள்ளது.

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையம் ஏறாவூர் (Eastern Cancer Care Hospice Eravur) தனவந்தர்களின் உதவியுடன் சுமார் 100 மில்லியன் செலவில் 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பராமரிப்பு நிலையம் கம்பீரமாக நவீன Ward வசதிகளுடன் காட்சி தருகிறது.இதன் நிரந்தர வருமானத்திற்காகநன்கொடையாளிவழங்கிய 4ஏக்கர்காணியில்பயிர்ச்செய்கைமேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூவின மக்களும் எவ்வித கட்டணமும் இல்லாமல்இதனைப்பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை முன்னின்று நடத்திக்கொண்டிருப்பவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்திய நிபுணர் Dr.A.Mohamed Iqbal அவர்கள்.

அவசர தொடர்புகளுக்கு Dr.Iqbal அவர்களின் தொலை பேசி இலக்கம்- 071 444 22 48

https://www.facebook.com/search/posts/?q=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20

ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையம் பற்றி

ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையம் இந்த நாட்டுக்கு முஸ்லிம்கள் செய்த பாரிய சேவை!!

உரியவர்களுக்கு உரத்து சொல்ல வேண்டிய தருணம்!!

இனம், மொழி பாராது பாதிக்கப்பட்ட அனைவரையும் இலவசமாக அன்புக்கரம் நீட்டி அரவணைத்து கொண்டிருக்கிறது.

உருவாக்கும் போது எத்தனை கேள்விகள்!!

எத்தனை விமர்சனங்கள்!!

எத்தனை விவாதங்கள்!!!

அனைத்திற்கும் காலம் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது.

ஒருநாள் செலவு 18000-25000 க்குமிடையில்…

எப்படி சமாளிக்கப்படுகின்றது என்பதே நிருவாகத்திற்கு புரியாத புதிர்!

அல்லாஹ்வின் அத்தாட்சியை நேரடியாக காணும் சந்தர்ப்பம்!

அல்ஹம்துலில்லாஹ்!

அனைத்தும் சிறப்பாகவே இயங்குகின்றது.

இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்திலும் இயங்கும்!!!

இவ்வளவுக்கும் உழைத்த நல்லுள்ளங்கள் எவ்வளவு சிரத்தை எடுத்திருப்பார்கள்.

எத்தனை இரவுபகல் ஓய்வின்றி உழைத்திருப்பார்கள்.

வெற்றிகரமாக ஒரு நிறுவனத்தை நடாத்த வேண்டும் என்று துடிப்பவனுக்கே அதன் வலி புரியும்.

அது அல்லாஹ்வுக்கும் அவர்களுக்கும்தான் தெரியும்!!

அதற்குரிய கூலியை மறுமையில் கண்டு கொள்வார்கள்.

தேசிய ரீதியாக அமானிதமாக கையளிக்கப்பட்ட இப்பராமரிப்பு நிலையத்தை பராமரிப்பது எங்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

அன்று உங்களது ஒவ்வொருவரினதும் வீடுகளை தட்டும் போது மனமகிழ்வுடன் வரவேற்றீர்களே!

அதிலும் குறிப்பாக சிலர் சமைக்க வைத்திருந்த பணத்தையும் ஸதாகா செய்து விட்டு சந்தோமாக பட்டினியாக அன்றைய தினத்தை கடத்தினீர்களே! அதே உணர்வுடன் மரணம் வரை உங்களது ஒத்துழைப்பை வழங்குங்கள்!!

பார்க்கிலும்,பீச்சிலும் மனநிம்மதிக்காக உரையாடுகின்றவர்கள் இங்கிருப்பவர்களுடன் வந்து உரையாடுங்கள்!

பராமரிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் இறையடி சென்று விட்டார்கள். இப்போது காணப்படுபவர்கள் புதியவர்களே!!

குறிப்பாக இப்பகுதிக்கு சுற்றுலா வர இருக்கும் சகோதரர்களே!

உங்களது நிகழ்ச்சி நிரலில் இப்பராமரிப்பு நிலையத்தையும் சேர்த்து கொள்ளுங்கள்!

குடும்பத்தோடு தரித்து நின்று அதன் அழகை இரசித்திடுங்கள்!உணவருந்துங்கள்!

இங்கிருப்பவர்களுடன் அளவளாவுங்கள்!

அல்லாஹ் எமக்களித்த அருட்கொடையையும் நினைத்திடுங்கள்.

நிச்சயமாக இப்பராமரிப்பு நிலையம் உங்களது உள்ளத்திற்கு அமைதியையும் நிம்மதியையும் சந்தோசத்தையும் தரும் என்பதில் நாங்கள் உத்தரவாதம் தருகின்றோம்.

இம்முயற்சியில் பங்கெடுத்த தனிநபர்கள், அமைப்புக்கள்,சங்கங்கள், நிறுவனங்கள் அனைவரினதும் இத்தூய எண்ணத்தை அல்லாஹ் பொருந்தி கொள்வானாக!!

Leaflet Tamil – PDF

உங்களது வீட்டில் நீண்ட நாள் நோயாளியான ஒருவரை பராமரிக்கின்றீர்களா?

அப்படியாயின் முறையானபராமரிப்பு முறைகளை முற்றிலும் இலவசமாக நாங்கள் பயிற்றுவிக்கின்றோம்.

புகைப்படத் தொகுப்பு

Related Posts