இலங்கையில் காணப்பட்ட பழங்காலத்து நாணயங்கள் – பஷீனா பிந்த் ரஹுமான்.

ஒரு நாட்டினுடைய அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் நாணயங்களானது மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது.

அவ்வகையில் நான் என்னுடைய சிறு பராயத்தில் இருந்தே நணயங்களை சேகரிக்கும் பிரியர்களுள் ஒருவராக மாறினேன். எனது எட்டு வயதில் மகாவலி கங்கையின் இலட்சினை பொறிக்கப்பட்ட இரண்டு ரூபாய் நணயமே என்னுடைய இந்த பொழுதுபோக்கு செயற்பாட்டிற்க்கு அடிப்படை காரணமாக அமைந்தது. புதிய தோற்றத்தைக் கொண்டு அந்த நாணயம் காணப்பட்டதால் அதே போன்ற நாணயங்களை சேகரிக்க அதிகளவிலான ஆர்வம் கொண்டேன்.

காலப்போக்கில் அந்த ஆர்வம் என்னை மேலும் மேலும் நணயங்களை சேகரிக்க தூண்டுதலாகவே அமைந்து காணப்பட்டது. புதிய நாணயங்களை அரசாங்கம் அமுலுக்கு கொண்டு வருவதை அறிந்த நான் பழைய நாணய குற்றிகளும் , தாள்களும் நடைமுறை செயற்பாட்டில் மிகவும் அரிதாகவே காணப்பட்டன. புழக்கத்தில் இருந்து குறைந்து செல்லும் இந்நாணயங்களை சில்லறைக்கடைகளில் மீதியாக கொடுக்கபடும் குற்றி னாணயங்களில் இருந்து இலங்கையின் தனிதுவத்தை  கூறக்க்கூடிய நாணயங்களை தெரிவு செய்து சேகரித்தேன்.

நமது தாய்த் திருநாட்டின் புதிய நணயதாள்களைப் பார்த்து வியந்த மக்கள் பழைய நணயத்தாளின் மதிப்பை கண்டு கொள்ளவில்லை. அது எனக்கொரு வாய்ப்பாக அமைந்தது. ஒரு முறை ஒருவரிடம் இருந்து என்னுடைய செலவிற்காக  வைத்திருந்த பணத்தைக் கொடுத்து பழைய இரண்டாயிரம் ரூபாய் தாளை மாற்றி எடுத்துக்கொண்ட சம்பவமும் உண்டு. வேடிக்கையாக அவர் என்னைப் பார்த்து “ செல்லுபடியாகமல் போகும் இந்த பணத்தை வைத்து என்ன செய்யபோகிறீர்கள்?” என்று கேட்டார். நான் என் மனதிற்குள் பொக்கிஷத்தை இழக்கும் உங்களிடம் எதைக்கூறியும் பயனில்லை என்று எண்ணிக்கொண்டேன். அதற்கான பலன் இதுவாகக்கூட இருக்காலாம்.

ஒரு சிலர் இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன் பயன்பாட்டில் இருந்த சதம்களின் மகிமை தெரியாமல் குப்பையில் போட எத்தணித்த அப்பொக்கிஷங்களை எனது சகோதரர்கள் என்னுடைய நாணய சேகரிப்பின் ஆர்வத்தை அறிந்து என்னிடம் கொண்டுவந்து ஒப்படைத்தார்கள். “ஆம் குப்பையில் போட்டாலும் குண்று மணி மங்காது” என்பதற்கு இந்நாணய சேகரிப்பு மிகச் சிறந்த உதாரணம்.

மேலும், எனக்கு தெரிந்தவர்கள் , எனக்கு உதவி செய்பவர்களிடம் இருந்தும் மேலதிகமாக வெளிநாட்டுக் குற்றி நாணயதாள்களையும் சிறப்பு மிகு இலங்கையின் குற்றி நாணயங்களயும் சேகரித்துக் கொண்டேன்.

இவ்வாறே எனது இக்சேகரிப்பு பயணம் தொடர ஆரம்பித்தது.

என் ணாட்டின் மீதுள்ள பற்று என் பயணத்தை மேலும் உயர்வடையச் செய்கிறது.

Related Posts