இச்சம்மேளனம் ஏறாவூரிலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தலையாய நிறுவனமாக விளங்குகிறது.

ஆரம்ப தலைவராக அல்ஹாஜ் வை.எம்.அப்துல் காதர் அவர்களும், செயலாளராக யூ.எல்.எம். ஜெய்னுதீன் அவர்களும் இச்சம்மேளனத்தை நிர்வகித்தனர்.

2001ஆம் ஆண்டு  மீண்டும் புதிய உறுப்பினர்கள் சுமார் 33 பேரை உள்வாங்கி (பள்ளிவாயல்கள் – 10 பேர், ஜம்மியதுல் உலமா சபையிலிருந்து 6 பேர், ஏனைய சங்கங்கள் 12 பேர்) இந்நிருவாக சபையின் தலைவராக மர்ஹூம் எஸ்.ஆர்.ஸாஹிர் மௌலானா அவர்கள் தேர்ந்த்டுக்கப்பட்டார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று முஸ்லிம் பிரதேசங்களை (ஏறாவூர், காத்தான்குடி, கல்குடா)  உள்ளடக்கிய பிரதிநிதிகளை கொண்டு “மட்டக்களப்பு மாவட்ட சம்மேளனம்” உருவாக்கப்பட்டு அதனுடன் இணைந்து இயங்கியது.

தற்போது ஊரின் பொதுவான பிரச்சினைகள் சம்பந்தமாக ஆராய அடிக்கடி இச்சங்கம் ஒன்று கூடுகிறது.

தற்போது இதன் தலைவராக ஜனாப். முஹம்மத் முஹைதீன் ஆசிரியர் அவர்களும் , செயலாளராக ஜனாப் ஏ.எல். முனீர் (சட்டத்தரணி) அவர்களும் நிருவகிக்கின்றனர்.

புகிப்படத்தொகுப்பு

Related Posts