• 01 – பண்டாரநாயக்க சர்வேதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இடம்பெற்ற உலகத் தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாடு நடந்தபோது கவிக்கோ அப்துல் றகுமான் (இந்தியா) தலைமையில் கவியரங்கம் ஒன்று இடம்பெறவிருந்தது. இதில் ஏறாவூரைச்சேர்ந்த பிரபல கவிஞர் புரட்சிக்கமால் அவர்களும் கலந்து சிறப்பிக்க இருந்தார்கள். ஆனால் இக்கவியரங்கிற்கு தலைமை தாங்கவிருந்த கவிக்கோ அப்துல் றகுமான் அவர்கள் அந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் அக்கிவிரங்கிற்கு தலைமை ஏற்கும் வாய்ப்பு கவிஞர் புரட்சிக்கமால் அவர்களுக்குக் கிடைத்தது. இது ஏறாவூருக்கு பெருமை சேர்க்கும் விடயமாக அமைந்தது. இலக்கிய வரலாற்றிலும் இந்நிகழ்வுக்கு ஓர் இடமுண்டு.
  • 02 – 1969 இல் உலக திருக்குர்ஆன் மாநாடு ஏறாவூரில் இடம்பெற்றிருந்ததோடு , அந்நிகழ்வில் முதலாவது சபாநாயகர் ஏ.எச்.இஸ்மாயில் அவர்களும் , பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உட்பட பல தேசிய பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வானது உமர் சக்காப் மௌலானா (அலி ஷாஹிர் மௌலானாவின் மைத்துனர்) இன் தலைமையில் இடம்பெற்றது.இந்நிகழ்விற்கு இந்தியாவிலிருந்து பிரபல பேச்சாளர்களான அப்துல் வஹாப் , கா. அப்துல் கபூர், எச்.எம்.பீ. முஹைதீன் போன்றோர் கலந்து சிறப்பித்தனர். இம்மாநாடு மூன்று நாட்கள் தொடராக இடம்பெற்றதோடு இது ஏறாவூருக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என்றே கூறவேண்டும்.
  • ஏறாவூரில் தேசியா மீழாத் விழா இடம்பெற்றது, இந்நிகழ்வானது ஏறாவூர் புன்னக்குடா வீதியில் அப்போது மக்கள் வங்கி அமைந்திருந்த மைதானத்தில் (சக்காப் மைதானம்) பிரமாண்டமான நிகழ்வாக இடம்பெற்றது. இச்சந்தர்ப்பத்தில் இன்னுமொரு வெற்றி இந்த ஊருக்கு கிடைத்தது. அது என்னவென்றால் யூ.எல்.தாவூத் சேர் அவர்கள் வெளிவாரிப் பட்டதாரிப் பரீட்சையில் சித்தியடைந்து விட்டார்கள் என்ற நற்செய்தியும் கிடைத்தது. ( இச்செய்தியானது மீழாத் விழா இடம்பெற்ற தருவாயில் குறிப்பாக இரவு எட்டு மணிபோல் கிடைத்தவுடன் மீழாத் விழாவில் உரையாற்றிக் கொண்டிருந்த உமர் சக்காப் மௌலானா அவர்கள் இச்செய்தியை மக்களுக்கு ஒலிபெருக்கியில் அறிவித்து ஏறாவூரின் கல்வி வரலாற்றில் முதல் அடையாளம் எனக் குறிப்பிட்டார்.
  • ஏறாவூரின் மௌலீத்  நிகழ்வுகள் அதிகமாக இடம்பெற்று வந்துள்ளது. “கந்தூரி” என்ற பெயரிலேயே இந்நிகழ்வு அழைக்கப்பட்டது. தற்போதும் நடை பெறுகிறது. இது “தலக்கந்தூரி” , “கடக்கந்தூரி”, காதர்க் கந்தூரி  என ஓதப்படுவதுடன் ஒவ்வொரு வீடுகளிலும் பத்து நாட்கள் தொடராக் ஓதப்பட்டு வருவது வழக்கம். கஞ்சி, நார்சாக்கள், கிஸ்பு மஜ்லிஸ்கள் என்று மார்க்க ரீதியான நிகழ்வுகள் இடம்பெற்றன. இன்னும் அதிகமான வீடுகளில்  மௌலீத் மஜ்லிஸ்கள் ஓதப்படும், அத்தோடு இதில் இடியப்பமும் , பாணி (அரிசிமாவில் சீனி மற்றும் தேங்காய்ப்பால் கலந்து காய்ச்சிய திரவப் பொருள்) போன்ற அம்சங்களும் காணப்படும்.
  • வீடுகளில் யாராவது மரணித்திருந்தால் ஜனாஸா நல்லடக்கத்தின் பின் அன்றிரவு “இருட்டுக் கத்தம்” என்ற ஒன்று ஓதப்படுவதுடன் பின்னர் மூன்றாம் நாள் கத்தம் , ஏழாம் நாள் கத்தம், நாற்பதாம் நாள் கத்தம் மற்றும் ஆண்டுக் கத்தம் என மரணித்த நபரின் நினைவாக நிகழ்வாக இடம் பெறுவதும், சாப்பாடு (அண்ணதாணம்) கொடுப்பதும் மார்க்க நிகழ்வாக இருந்தது.
  • காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி திரு ரணசிங்க பிரேமதாஸ ஏறாவூர் விஜயம்.
  • இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி திரு ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் ஏறாவூருக்கு வருகை தந்திருந்தார்கள்.
  • ஏறாவூர் தபால் நிலையம் திறப்பு விழாவின் போது அப்போதைய தபால் தொலைத்தொடர்புகள் பிரதியமைச்சர் அல் ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டிருந்தாரகள்.
  • ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அடிக்கல் நாட்டு விழாவின்போது சுகாதார அமைச்சர் அல் ஹாஜ் எம்.எச்.எம்.பௌசி அவர்களும், பிரதி சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராய்ச்சி அவர்களும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அல் ஹாஜ் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களும்  மற்றும் அல் ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களும் கலந்து கொண்டிருந்தாரகள்.

eeravur.lk என்ற இணையத்தளம் உத்தியோக பூர்வமாக இன்று (21.09.2023) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படது.

‎‏﷽

இன்று eEravur.lk என்ற இந்த இணையத்தளம் இறைவனின் நாட்டத்துடனும், நல்லோர்களின் ஆசியுடனும் இன்று எனது அவர்களின் தாயார் #மஹுமூது_லெவ்வை_புஹாரி_உம்மாவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதனது நிறை, குறைகள், விமர்சனங்கள் என்பவற்றை உள்வாங்கி இவ்விணையத்தளத்தைத் தொடர்ந்து கொண்டு செல்ல வல்ல இறைவன் அருள்புரியட்டும் 🤲 ஆமீன்.

இவ்விணையத்தளத்தை உருவாக்க உறுதுணையாக இருந்த Maslin Neo (KKY), Mohamed Razeem மற்றும் Ammar Ahd ஆகியோருக்கும் Rifaideen SH (ஓய்வுபெற்ற ஆசிரியர்), Niamath M Faizal நானா, Abdul Waji நானா ஆகியோருக்கும் மற்றும் இவ்விடயத்தில் இணைந்து கொண்ட அனைவருக்கும் இறைவன் ஈருலகிலும் அருள்புரியட்டும். ஆமீன்

(அல்ஹம்துலில்லாஹ்)

https://play.google.com/store/apps/details…

Related Posts