எமதூரின் விளையாட்டை பொருத்தவரை அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஊருக்கென்று தனித்துவமான இடம் இருப்பதோடு, தேசியம் தொட்டு சர்வதேசம் வரைக்கும் சரித்திரங்கள் பல படைத்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இன்றைய நிலையில் நாம் எல்லோரும் பெயரிட்டு செல்லக்கூடிய விளாய்யாடுக்கள் காணப்பட்டாலும் கூட எமதூரிலிருந்து இன்று மறுவிச் சென்றுள்ள நமது சமூகத்துக்கான் பாரன்பரிய விளையாட்டுக்களிலே

 • வார் விளையாடு
 • மட்டைப்பந்து (கிரிக்கட்)
 • சீனடி , சிலம்படி
 • கிளித்தட்டு
 • சங்கு விளையாட்டு
 • நொண்டி விளையாட்டு
 • கல் கொத்துதல்

போன்ற இன்னோரன்ன பல விதமான விளையாட்டுக்களையும் குறிப்பிட முடியும்.

பொதுவாக இந்த பாரம்பரிய விளையாட்டுக்களில் கிளித்தட்டு , வட்டக்கோடு, கால் பந்து , கிட்டிப்பொல், உச்சிக்கிட்டி, உருளைக்கிட்டி, காசு சுண்டுதல், போன்ற விளையாட்டுக்களானது ஏறாவூரின் ஆற்றங்கரையை அண்டிய அலித் தம்பியரின் வயல். முஹம்மது ஹாஜியார் வயல், கரீம் ஆசிரியர் வயல் போன்ற வற்றில் விவசாயப் போகம் முடிந்ததத்ற்குப் பின்னர் விளையாடுவது வழக்கமாக இருந்தது.

இதற்கப்பால், மல்யுத்தம் (குஸ்தி) என்பது பெரும் செல்வாக்குப் பெற்ற விளையாட்டாக எமதூரிலே காணப்பட்டிருந்தது. எஸ்.எம். இப்ராஹிம் ஆசிரியர் , ஏ.எம். கனீபா ஆசிரியர், பீ. காசிம் , யூ.ஏ.றசீத் போன்றோர் குறிப்பிடத்தக்க மல்யுத்த வீரர்களாக கணப்பட்டனர்.

பின்னர், இம்மல்யுத்த வீரர்கள் பாடசாலையிலுள்ள மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி, பாடசாலை மட்ட போட்டிகளில் பங்கு பற்றவும் செய்தனர்.

ஆரம்ப கால விளையாடுக் கழகங்களைப் பொருத்தவரை 1950 இல் ஐயங்கேணி கிராமத்தில்

 • பிரதர்ஸ் டீம்  (BROTHERS TEAM) 
 • ஈஸ்டன் ஸ்டார் (EASTERN STAR)

என்ற பெயர்களில் இவ்விரு விளையாடுக் கழகங்களும் ஆரம்ப விளையாடுக் கழகங்களாக உதயமாகியது.

1952 ஆம் ஆண்டு அகில இலங்கை “YMMA “இன் ஒரு கிழையாக “ஏறாவூர் YMMA கரப்பந்தாட்டக் கழகம் உருவானது. இக்கழகத்தில் இருந்தவர்களே பின்னர்பல கரப்பந்தட்டக்க கழகங்களை உருவாக்கியமை முக்கிய அம்சமாகும்.

1960 காலப்பகுதியில் ஏறாவூரில் பல தமிழ் கரப்பந்தாட்டக் குழுக்கள் தோற்றம் பெற்றன. அந்த வகையில்

 • லக்கி விவேகானந்ததா
 • ஐந்தாம் குறிச்சி விவேகானந்தா
 • பாரதி விளையாடுக் கழகம்
 • சக்ஸஸ் விளையாடுக் கழகம்

முதலான கழகங்களிலே ஏறாவூர் முஸ்லிம் மற்றும் தமிழ் சகோதரர்கள் இணைந்து கரப்பந்தாட்டத்தை மேற்கொண்டனர்.

மேலும், சீனடி , சிலம்படி விளையாடுக்கள் நமதூர் கலாச்சார, பாரம்பரியத்தை அடையாளப்படுத்தி இருந்தது.

திருமணத்தின் போது மாபிள்ளை அமைப்பு, பிரமுகர்களுக்கான வரவேற்பு போன்ற அழைப்பு சார் நிகழ்வுகளில் இன்றைய “BAND” க்கு ஒப்பாக இது கலை ரசனை மிக்கதாய் அமைந்திருந்தது.

1960 களிலிருந்து  “தடகள“ விளையாடுக்கள் மட்டுமல்லாது

 • உதைப்பந்து
 • கிரிக்கட்
 • கரப்பந்து
 • எல்லே
 • தாச்சு  

முதலான விளையாடுக்களில் இன்று வரைக்கும்  பல சரித்திரங்களை எமதூர் படைதிருக்கின்றது. கழகங்களாகவும், பாடசாலை மட்டங்களாகவும் தோற்றி தேசிய மட்டம் சென்று , ஏன் சர்வதேச அரங்கிலும் வெற்றி வாகை ச்சொடியுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

எமதூரின் விளையாட்டுத் துறையை சர்வதேச மட்டதிற்கு எடுத்துச் சென்ற அலியார் மஹ்மூத் (பொலிஸ் உத்தியோகத்தர்) தனித்துவ இடத்தை தேடித்தந்திருந்தார்.

இத்துறையில் பின்னர் தேசிய ரீதியாக பல வெற்றிகளைப் பெற்றுத் தந்தோரில்

 • ஜானப் எம்.சி. முஹம்மத்
 • அல்ஹாஜ் எம்.எம்.ஏ. தாஹா ஹுஸைன்
 • அல்ஹாஜ் எம்.எம்.ஜவ்ஹர் ஹுஸைன்
 • ஜனாப் ஹாஜிரீன்
 • ஜனாப் ஏ.எம்.லாபீர் (ஸாஹிப்)
 • ஜனாப் எம்.டீ. வஹாப்தீன்
 • ஜனாப் எம்.ஐ. நூர் முஹம்மத்
 • ஜனாப் என்.எம்.பாறூக்
 • ஜனாப் எம்.எச்.எம்.நசீர்
 • அல்ஹாஜ் எம்.எம்.முஹைதீன்
 • எச்.எம்.எம்.மாஜித்
 • ஜனாப் எச்.எம். ஹனீபா
 • ஜனாப் ஏ.எம்.ஏ. காதர்
 • ஜனாப் எஸ்.எச்.சுபைர்
 • ஜனாப் வீ. கலீலுர் ரஹ்மான்
 • ஜனாப் ஏ.எல்.எம். முனீர்
 • அல்ஹாஜ் எஸ்.எச்.எம். முஸம்மில்
 • ஜனாப் எம்.சி.கபூர்
 • அல்ஹாஜ் எம்.எம்.சக்கூர்
 • ஜனாப் வை.எம். சபீர்
 • ஜனாப் எம்.ஐ.எம் றம்ஸி
 • ஜனாப் எம்.சி.நவாஸ்
 • மர்ஹூம் எம்.எம்.லத்தீப்
 • ஜனாப் எம்.ஐ.எம்.நசீர்
 • ஜனாப் ஏ.எம்.எம்.அனவர்
 • எஸ்.எம்.எம். இப்ராஹிம்
 • ஏ.அலி ஸியாம்

Related Posts