ஏறாவூர் வரைபடம் – 2023

ஏறாவூரின் வரலாற்றுப் பின்னனி

அமைவிடம்.

உண்மையிலே ஒவ்வொரு சமூகங்களினதும் வரலாற்றினை உலகமெங்கும் எடுத்துச் செல்வது அந்தந்த சமூகங்களினுடைய கலாச்சார, பாரம்பரியங்கள் மற்றும் புவியியல் ஆள்புலமும் ஆகும். அந்த வகையில் ஏறாவூரானது இலங்கையினுடைய கிழக்கு மாகாணத்திலே அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் வட மேற்கே சுமார் 12 கிலோமீட்டர்களுக்கு அப்பால் அமைந்துள்ளது.

இந்த பிரதேசத்தினுடைய புவியியல் எல்லைகளானது வடக்கே வங்கக் கடலினையும் , கிழக்கிலே ஆறுமுகத்தான் குடியிருப்பினையும், மேற்கே செங்கலடி பிரதேசத்தினையும், தெற்கே வாவிக்கரையினையும் (ஏரி) நாற்த் திசை பூர்வீக எல்லைகளாகக் கொண்ட  முக்கியத்துமிக்க பிரதேசம் ஏறாவூராகும்.

புவியியல் பின்னனி.

இந்த பிரதேசத்தின்  தெற்கே அமைந்துள்ள வாவியை அண்டிய பகுதியானது  சதுப்பு நிலத்தினை கொண்டிருப்பதினால் அதனோடு இணைந்த சிறிய பரப்பளவைக் கொண்ட விவசாயக் காணிகளையும் , வாவிக்கரையானது இலங்கையின் பெறுமதிமிக்கதொரு சுற்றுலாத் தளமாக இயற்கையோடு  பின்னிப்பிணைந்து காணப்படுவதினால் பொழுதுபோக்கு தளத்தினையும் கொண்டமைந்த கிழக்கின் முக்கியத்துமிக்க பிரதேசமாக ஏறாவூர் , இலங்கையின் வரலாற்றில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பிரதேசத்தின் காலநிலையை எடுத்துக் கொண்டால், இலங்கையினுடைய அமைவிற்கு ஏற்றவாறு கிடைக்கின்ற காலநிலையினுடைய சகல மாற்றங்களையும் சந்தித்து வருவது இயல்பு.

அந்த வகையில், மே மாதம் தொடக்கம் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் “கச்சான்” எனப்படுகின்ற வடகீழ் பருவக் காற்றினையும், வடக்கே வங்கக்க்கட்லினைக் கொண்டிருப்பதினால் உகைப்புக் காற்றினையும், நவம்பர் மாதம் தொடக்கம் ஜனவரி மாதக் காலப்பகுதியில் வங்கக் கடலினிலே ஏற்படுகின்ற தாழமுக்கத்தின் காரணமாக கணிசமான அளவு மழை வீழ்ச்சியினையும் பெற்றுக்கொள்கிறது.

மேலும், இந்த பிரதேசமானது தாழ் நாட்டு உலர் வலயத்தினுள் உள்ளடங்குவதினால் வருடாந்த மழை வீழ்ச்சிக்குப் பின்னர் உயர் வெப்பத்தினையும் கொண்டமைந்துள்ளது. வடக்கே கடலினையும் , தெற்கே  வாவியயும் கொண்டிருப்பதினால் இவ்வுயர் வெப்பமானது சராசரியாக மட்டுப்படுத்தப்படுகிறது.

பூர்வீகம்.

இலங்கை முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய  பிராந்தியமாக அடையாளப் படுத்தப்பட்டுள்ள கிழக்கிலங்கையின் முக்கிய கேந்திரத் தளமாக அமைகின்ற மட்டக்களப்பு மாவட்டமானது 133,939 (25.51%) முஸ்லிம் மக்களை பூர்வீகக்குடிகளாகக் கொண்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, அதிகமான முஸ்லிம்களைக் கொண்டுள்ள ஏறாவூர் பிரதேசமானது மட்டக்களப்பு துறைமுக வர்த்தகதிற்கு பிரசித்தி பெற்ற காலத்திலிருந்து முஸ்லிம்களையே ஆரம்ப குடிகளாக கொண்டிருக்கிறது. பொதுவாக மட்டக்ளப்பு மாவட்டமானது “திமிலர்கள்” எனப்படுகின்ற ஒரு பெரும் குலத்தினரையே சார்ந்திருந்தது.

யாழ்ப்பாணத்தில் “முக்குவர்” எனப்படுகின்ற ஒரு குலத்தினர் வாழ்ந்து வந்தனர் வன்னி ராசதாணியை ஆட்சி செய்த மன்னன் கலிங்கச்சக்கரவர்த்தி முத்துக்குளிப்பதற்காக இவர்களை ஆரிய நாடிலிருந்து வரவழைத்து யாழ் குடா நாட்டில் குடியமர்த்தியிருந்தான். பின்னர் இவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பினுடைய சில குடியேரலாயினர்.

அதேபோன்று “பட்டாணியர்கள்” எனப்படுகின்ற ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் வட இந்தியர்கள் வியாபாரக் குழுக்களாக வங்கக் கடல் வழியாக மட்டக்களப்பு தெற்குப் பிரதேசத்தில் குடியேரலாயினர்.

இந்த பட்டணியர்கள் வியாபரத்திற்காக முக்குவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த பிரதேசதிற்குள் வந்த போது திமிலர்களால் துன்புறுத்தப்பட்ட முக்குவர்கள் இவர்களிடம் உதவி கோரி நின்றனர். இந்த திமிலர்கள் வழமையாகவே முக்குவர்களினுடைய பொருளாதரத்தை சூறையாடும் சமூகமாகவே இருந்து வந்தனர். பட்டாணியர்களின் பாரிய உதவியுடன், பாட்டாணியர்களும் , முக்குவர்களும் இணைந்து திமிலர்களை எதிர்த்து போரிட பல படைகளையும், காவலரண்களையும் அமைத்து தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டனர். இந்த பாதுகாபு வலையமானது அதிகமாக ஏறாவூர் பிரதேசதிலேயே அமைக்கப்பட்டிருந்தது இதனால் திமிலர்கள் ஏறாவூருக்கு வருவது தடைப்பட்டிருந்தது. இதிலிருந்தே இவ்வூருக்கான நாமம்  எதிரிகளை ஏற விடாது தடுத்த ஊர் என அர்த்தப்பட “ஏறாவூர்” என அழைக்கப்படுகிறது.

ஏறாவூரின் மக்கள் தொகை

குடும்பம்-இனம்-மத ரீதியான சனத்தொகை – ஏறாவூர்

மத ரீதியான மக்கள் தொகை – ஏறாவூர்

வயது ரீதியாக மக்கள் தொகை – ஏறாவூர்

அரசாங்க உத்தியோகத்தர்கள் – ஏறாவூர்

பதியப்பட்ட விளையாடு கழகங்களும்/ சமூக நலச் சங்கங்களும் – ஏறாவூர்

NGO – Contact Details – Eravur

Related Posts