• மர்ஹூம் அப்துல் ஹஸன் ஆலிம்
 • மர்ஹூம் அப்துல் சலாம் ஆலிம்
 • மர்ஹூம் அலியார் ஆலிம்
 • மர்ஹூம் முஹைதின் ஆலிம்
 • மர்ஹூம் செய்னுல் ஆப்தின் ஆலிம்
 • மர்ஹூம் சீனிமுகம்மது ஆலிம்
 • மர்ஹூம் சின்ன லெப்பை ஆலிம்
 • மர்ஹூம் பிச்சைக்குட்டி ஆலிம்
 • மர்ஹூம் கலீல் ஆலிம்
 • மர்ஹூம் காசிமா லெப்பை ஆலிம்
 • மர்ஹூம் ஹயாத்து லெப்பை ஆலிம்
 • மர்ஹூம் முஸ்தபா ஆலிம்
 • மர்ஹூம் இஸ்மாயில் ஆலிம்
 • மர்ஹூம் ஸமது மௌலவி
 • மர்ஹூம் ஹனீபா ஆலிம்
 • மர்ஹூம் அன்வர் அலி மௌலவி

மர்ஹூம் அப்துல் ஸலாம் ஆலிம்

கிட்டத்தட்ட 1955ம் ஆண்டிலிருந்து 2003 வரையில் எங்களது ஆலிமு மர்ஹும் மரியாதைக்கும், கண்ணியத்திற்குமுரிய எம்.எச்.ஏ.அப்துஸ் ஸலாம் ஆலிம் அவர்களிடம் குர்ஆன், அஹ்காமுல் முஸ்லிம் , மௌலிது ஆகியவற்றை கற்றவர்கள் பலர்.

ஆற்றங்கறைப்பள்ளியின் ஒரு பகுதியில் பல வருடங்களும், ஓட்டுப்பள்ளி வீதியில் இருந்த அவரது மூத்த மகளின் வீட்டில் சில வருடங்களும் குர்ஆனை கற்பித்துக் கொடுத்தவர்.

ல,ள,ழ என்பவற்றை இவர் உச்சரித்து சொல்லித்தரும் அழகே தனி.

எனது தாயும் இவரிடமே அல்குர்ஆனை கற்றுத்தேர்ந்தார். என்னுடைய மூத்த சகோதரியின் பிள்ளைகளுக்கும் இவரிடம் அல் குர்ஆனை கற்கும் பாக்கியமும் கிடைத்தது.

கிட்டத்தட்ட மூன்று தலை முறையினர் இவரிடம் குர்ஆனை கற்றுத்தேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கை பயணத்தில் பல மரணங்களை கடந்து வந்தாலும், சில இழப்புகள் பெருமளவு பாதிக்கும்.

எங்களது ஆலிமின் இழப்பும் ஈடுசெய்ய முடியாதது.

🤲 இறைவா!

இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக!
இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக!இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக!

வெண்மையான ஆடையை அழுக்கிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திருந்து சுத்தம் செய்வாயாக! இவரை கப்ரின் வேதனையிருந்து காப்பாயாக!

ஆமீன் ஆமீன் ஆமீன் 🤲

முஹம்மத் பஸ்லுல்லாஹ்.

Related Posts