(முன்னால் கிழக்கு மாகாண சபையின் சுகதார, சுதேசிய வைத்தியத்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர்)

1968.05.27 அன்று அலியார் முஹம்மது ஷரீஃப் – சின்னத்தம்பி ஆமினா உம்மா ஆகிய தம்பதிகளுக்கு புதல்வராக பிறந்தவரே அல் ஹ்ஹஜ் எம்.எஸ். சுபையிர் ஆவார்.

மூன்று சகோதரர்களையும், ஒரு சகோதரியயும் கொண்ட குடும்பத்தில் அல் ஹாஜ் எம்.எஸ். சுபையிர் அவர்கள் இரண்டாவது புதல்வராவார். தன்னுடைய ஆரம்பக் கல்வியை அல் அஸ்ஹர் வித்தியாலத்திலும், வாழைச்சேனை அன்நூர் தேசியப் பாடசாலையிலும் பின்னர் உயர் கல்வியை மட்/ஏராவூர் மத்திய மகா வித்தியாலத்திலும் கற்றுத்தேர்ந்தார். பின்னர் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கலைமானிப் பட்டப்படிப்பையும் முடித்துக்கொண்டார்.

இவர் 1985 காலப்பகுதியில் ஏறாவூர் 3 ஏ கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டதுடன் சமூக சேவைக்ளைச் செய்வதில் தீவிர பற்றுள்ளவராகவும் திகழ்ந்தார். பின்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர்கள் பிரிவின் தலைவராகவும் செயற்பட்டார்.

கடந்த 2005 இல் ஏறாவூர் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அதிகூடிய வாகுகளைப் (2610) பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து 2008 இல் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிருந்தார். 2008 தொடக்கம்  2010 வரை மாகாண சபை உறுப்பினராகவும், 2010 இலிருந்து மாகாண சுகாதார, சுதேசிய வைதியத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவியேற்று 2012 வரை செயற்பட்டார்.

அது மாத்திரமல்லாது, 2012 இல் இடம் பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு சபையின் பிரதித் தவிசாளராக பதவி வகித்தார். 2017 வரை கிழக்கு மாகாண சபையின் கௌரவ உறுப்பினராகவும் செயறபட்டார். 2017 இல் கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் முடிவுற்றதன் பின்னர் , 2018 இல் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக சபைக்குள் பிரவேசித்தார்.

அதனைத் தொடர்ந்து 2020 இல் கிழக்கு மாகாண சபையின் வீடமைப்பு அதிகார சபை தவிசாளராக முன்னால் ஜனாதிபதி மைத்திரி பால ஸ்ரீ சேனாவால் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ஏறாவூர் நகர சபையின் உறுப்பினராக செயற்பட்ட இவர்  2023 இல் ஏறாவூர் நகர சபையில் ஏற்பட்ட பாதியீட்டுத் தோல்வியால் அச்சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டு குறுகிய காலத்தில் பல அபிவிருத்திப் பணிகளையும் செய்து முடித்தார்.

கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் முன்னால் அமைச்சர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். அமீர் அலியினுடைய அரசியல் கட்சியில் இணைந்து ஏறாவூர் பொதுச் சுகாதார  பணிமனையினை அமைச்சரின் பங்களிப்புடன் நிறுவினார்.

ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையினை ஆதார வைத்திய சாலையாக மாற்றுவதில் வெற்றி கண்டது மாத்திரம் அல்லாது , ஏறாவூர் ஆயுர்வேத வைத்திய சாலையினையும் ஆதார வைத்திய சாலையாக தரமுயர்த்திக் கொடுத்தார். அதே போல் ஏறாவூர் பற்றுப் பிரதேசத்தில் கால் நடைகள் வைத்திய சாலை ஒன்றினை நிறுவதிலும் முயற்சி செய்து அதனையும் மீராகேணிப் பகுதியில் அமைத்தும் கொடுத்தார்.  

அது மாத்திரமல்லாது சுகாதாரத் துறையில் ஏறாவூரின் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

குறிப்பாக இடம்பெயர் கிராமங்களான உறுகாமம், வடிச்சல் போன்ற கிராமங்களில் மக்களை மீள்குடியேற்றி அம்மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தது மாத்திரமல்லாது மக்களது அரசியல் அபிலாஷைகளையும் , எதிர்பார்ப்புக்களையும் நிறை வேற்றுவதில் மிகக் காத்திரமான பங்களிப்புக்களை செய்திருந்தார்.

ஏறாவூர் மக்களினது காணிப் பிரச்சினைகள் தொடர்பில் அடிக்கடி குரல் கொடுத்த இவர் ஏறாவூர் மக்களது நிருவாக விடயங்களில் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதிலும் கணிசமான பங்கினை வகித்ததோடு , கல்வி ரீதியாக மட்/ மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தை,  தேசிய படசாலையாக நிறுவுவதிலும் பாரிய பங்கினை வகித்தார்.

குறுகிய கால அரசியல் பயணத்தில் இப்பிராந்திய மக்களின் மிகவும் விருப்பத்துக்குள்ளானவராக காணப்பட்ட இவர் தனக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை தனது சமூகத்திற்காக பயன்படுத்துவதிலும் தன்னை அரப்பணித்தவராவார்.

பின்னர், முன்னால் அமைச்சர் அல்ஹாஜ் எஎம்.எஸ்.எம். அமீர் அலி அவர்களோடு ஏற்பட்ட முறுகல் நிலையின் காரணமாக ஸ்ரீலங்கா சுதத்ந்திரக் கட்சியுடன் இணைந்து அக்கட்சியின் மாவட்ட தலைவராகச் செயற்ப்பட்டதுடன் பின்னர் அமைச்சர் அமீர் அலியின் கட்சியில் இணைந்து அவரது அரசியல் பயணத்தில் பங்கெடுத்து ஊர் மக்களுக்காக பல பணிகளை செய்திருந்தார்.

இவர் இந்த ஊருக்கு துடிப்புடன் செய்துகொண்டிருக்கின்ற நிறைவான பணிகளின் கார்ணமாக ஏறாவூர் மக்கள் “ மின்னல் சுபைர்” என்றே அழைப்பார்கள்.

இளமைக்காலத்திலிருந்தே இந்த சமூகத்திற்காக உழைக்க வேண்டுமென்ற உயரிய எண்ணத்தில் அரசியலில் பிரவேசித்த இவர் இன்று வரைக்கும் இந்த மண்ணுக்காக ஓயாது எதிர்பார்ப்பில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

Related Posts