27.04.1960 ஆம் ஆண்டு சேகுதாவூத் – ஹலீமா பீவீ தம்பதியினருக்கு இரண்டாவது புதல்வராகப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை மட்/அறபா வித்தியாலயம் மற்றும் மட்/ அலிகார் மகா வித்தியாலயம் என்பவற்றில் பயின்றார்.

க.பொ.த உயர்தர விஞ்ஞானப் பிரிவிலான கற்கையினை மட்/ வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் மேற்கொண்டார்.

1979 இல் மட்/றூகம் அ.மு.க பாடசாலையில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.பின்னர் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியர் பயிற்சியினை மேற்கொண்டு 1989 ஆண்டு வரை ஆசிரியராக பணிசெய்தார்.

1989 இல் பாராளுமன்ற பிரவேசத்துடன் ஆசிரியர் பதவியைத் தொடர்ந்தார்.

இவ்வேலை தமிழீழ விடுதலைப் போரட்டத்தில் பல தமிழ் குழுக்கள் தீவிர போராட்டங்களை ஆரம்பிதிருந்தன. ஈழ மாணவர் புரட்சிகர முன்னனி (ஈரோஸ்) அமைப்பின் கொள்கைகளில் பிடிப்புக்கொண்டு அவ்வமைப்பில் தன்னை ஒரு உறுப்பினராக ஈடுபடுத்திக்கொண்டார். ஆயுதப் போராட்டத்தில் ஈடு பட்டிருந்த இவ்வமைப்பின் மட்டக்களப்புப் பிரதேசத்துக்கான அரசியற் துறைப் பொறுப்பளாளராக்ப் பணியேற்றுச் செயற்பட்டார்.

1998 இல் நோர்வேயிலுள்ள ஒஸ்லோ பலகலைக் கழகத்தில் சமாதான ஆராயிச்த்துறையில் பட்டம் பெற்றார்.

ஈரோஸ் அமைப்பு ஜனநாயக வழிக்குத் திரும்பி தேர்தல் களத்தில் குத்தித்தபோது 1989 பொதுத் தேர்தலில் ஈரோஸ் சார்பான சுயேச்சைக் குழுவில் போட்டியிட்டார். பாராளுமன்ற பிரதிநிதித்துவ வாய்ப்பு இல்லாது போனாலும் தேசியப்பட்டியல் பிரதிநிதியாக நியமனம் பெற்று முதன்முதலாக 1989 இல் பாராளுமன்றம் நுழைந்தார்.

1994 இல் அல்ஹாஜ் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.

1994 இல் இடம்பெற்ற பொதுதேர்தலில் தேசியப்பட்டியல் நியமனத்துடன் மீண்டும் பாராளுமன்றம் நுழைந்தார்.

2001 இல் இடம்பெற்ற பொதுதேர்தலில் தேசியப்பட்டியல் நியமனத்துடன் மீண்டும் பாராளுமன்றம் நுழைந்தார். இந்த அர்சாங்கத்தில் இவருக்கு வீடமைப்புப் பிரதியமைச்சர் பதவியும் கிடைத்தது.

2003 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளராக நியமிக்கப்பட்டு கட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்து , வழி நடாத்திச் செல்லும் பாரிய பணியும் ஒப்படைக்கப்பட்டது.

2004 இல் இடம்பெற்ற பொதுதேர்தலில் தேசியப்பட்டியல் நியமனத்துடன் மீண்டும் பாராளுமன்றம் நுழைந்தார்.

சேவைகள்

 • ஏறாவூர் பொது வாசிக சாலைக்கான கட்டிடமொன்று இவரால் அமைத்துக் கொடுக்கப்படது.
 • பாடசாலைகளுக்கு நீர் தாங்கி வசதிகள் மற்றும் மின்னிணைப்புக்கள் முதலியன இவரால் செய்து கொடுக்கப்பட்டன.
 • மட்/ அறபா வித்தியாலயம் மற்றும் மட்/ அலிகார் தேசிய படசாலைக்கு மடிக்கட்டிடமும் இவரால் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
 • 50 வீடுகளைக் கொண்ட றூபி முஹைதீன் மாதிரிக்கிராமம் இவரது சிந்தனையின் உதயமாகும்.
 • ஹிதாயத் நகர் பிரதேசத்தில் ஒரு ஆரம்பப் பாடசாலை நிறுவுவதற்காக ரூபாய் பத்து இலட்ச்சத்தினை ஒதுக்கீடு செய்துள்ளார்.
 • டாக்டர் அஹமத் பரீட் மீராலெப்பை கலாச்சார மண்டபம் மற்றும் மீராகேணிப் பள்ளிவாயலில் ஒரு கலாச்சார மண்டபமும் இவரது பணியின் ஆடையாளங்கள் ஆகும்.
 • மீராகேணிக் கிராமத்தில் ஒரு சந்தைக் கட்டிடம், ஐய்யங்கேணியில் ஒரு வாசிக சாலைக் கட்டிடம், ஏறாவூர் நகர பிரதேச சபைக் கட்டிடத்தில் ஒரு இயந்திர சாலை முதலானவையும் இவரது முயற்சியின் பிரதிபலிப்பாகும்.
 •  2003 இல் தேசிய மீலாத் விழாவினை ஏறாவூரை மைய்யமாகக் கொண்டு நடாத்துவதற்க்கு இவரால் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏறாவூருக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.
 • இம் மீலாத் விழாவினை முன்னிட்டு பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இவ்வூரில் இடம்பெற்றன.
 • ஏறாவூர் முதலாம் குறிச்சி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயலின் புனர் நிர்மாணம் – 1 கோடி ரூபாய்
 • மஸ்ஜிதுல் ஹிழ்ர் பள்ளீவாயல் – 5 இலட்சம் ரூபாய்
 • மீராகேணி பள்ளிவாயல் – 10 இலட்சம் ரூபாய்
 • அக்பர் பள்ளிவாயல் – 4 இலட்சம் ரூபாய்
 • அலிகார் தேசிய பாடசாலை விடுதி அமைப்பு – 50 இலட்சம் ரூபாய்
 • ஏறாவூர் பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி

Related Posts