செய்யது முஹம்மது ஸாஹிர் மௌலானா – சுபைதா தம்பதியினருக்கு 25.06.1956 இல் ஏறாவூரில் பிறந்தார்.

தனது ஆரம்பக் கல்வியை ஏறாவூரிலுள்ள மட்/அறபா வித்தியாலத்திலும் , மட்/ அலிகார் மகா வித்தியாலத்திலும் கற்றார். தனது உயர்தரக் கல்வியை மட்/ சென் மைக்கேல் கல்லூரியிலும் மேற்கொண்டார்.

1977 இல் விஞ்ஞான/ கணித ஆசிரியராக நியமனம் பெற்று மட்/அலிகார் மஹா வித்தியாலத்திலும் சேவையாற்றினார். சொற்ப கால சேவையின் பின் தனது பதவியைத் துறந்து உயர் கல்வியை தொடர்வதற்காக சென்னை ஜமால் முஹம்மது கல்லூரிக்கும் அதன் பின்னர் அமெரிக்காவின் கலிபோனியாவிற்கும் சென்றார்.

தான் கல்வி கற்ற காலத்தில் விளையாட்டுத் துறையில் அதிக ஆர்வம் காட்டினார். உதைப்பந்தாட்டத் துறையில் கூடிய கவனம் செலுத்தி சிறந்த கோல் காப்பாளராகத் திகழ்ந்தார். 1972 காலப் பகுதியில் உருவாக்கப்பட்ட இளந்தாரகை விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராகவும் விளங்கினார். உதைப்பந்தாட்டத் துறையில் பல வெற்றிகள் கிடைக்கவும் இவரது சிறந்த கோல் காப்பு காரணமாய் அமைந்தது.

1990 இல் ஏற்பட்ட வன்செயலின் போது அவர் மேற்கொண்ட பணிகள் இவ்வூர் மக்களின் உள்ளங்களில் அவருக்கு தனியான ஓர் இடத்தைப் பெற்றுத்தந்தது.

1978 இல் சூறாவளியால் மக்களுக்கு பல நிவாரண உதவிகளைச் செய்தார்.

1985, 1990 களில் ஏற்பட்ட இனப்படுகொலைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, பாதுகாப்பு வசதிகளையும் செய்து கொடுத்தார்.

1989 இல் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தல் மூலம் தனது அரசியல் பிரவேசத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூலம் மேற்கொண்டார்.

1994 இல் நடைபெற்ற ஏறாவூர் நகர பிரதேச சபைத்தேர்தலில் சுயேச்சைக் குழுவில் தனது தலைமையில் தராசுச் சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று பிரதேச சபை தவிசாளரானர்.

அப்போதைய ஜனாதிபதி டீ.பி. விஜேதுங்க அவர்களின் வரவேற்புடன் ஜனாதிபதி மாளிகையில் தனது ஆதரவாளர்களுடன் சென்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.

அதே ஆண்டு (1994)  நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் , முஸ்லிம் வாக்குககளைப் பெற்று அமோக வெற்றீயீட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்றப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து 2000 ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமை வேற்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமிக்கப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவானர்.

இரு சந்தர்ப்பங்களிலும் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரும் சந்தர்ப்பமே இவருக்குக் கிடைத்தது. குறுகிய காலப் பகுதியில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 2001 இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு இவருக்கு இல்லாமல் போனது.

பின்னர் பிரதமரின் பொறுப்பில் இருந்த கொள்கை, திட்டமிடல் , அமுலாக்கள் அமைச்சின் ஆலோசகராக இவர் நியமிக்கப்பட்டதன் மூலம் தமிழ், முஸ்லிம் மக்கள் பல்வேறு நன்மைகளைப் பெறமுடிந்தது.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்து கொண்டிருந்த உடன்பாட்டிற்கு ஏற்ப இவர் தேர்தலில் போட்டியிடாமல் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்று குறுகிய காலப்பகுதியில் தனது சுய விருப்பின் பேரில் இராஜினாமா செய்தார்.

கடந்த 06.10.2023 திகதிய உயர் நீதிமன்றத்தின் வரலாறு படைத்த தீர்ப்பின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.

கௌரவ அல்ஹாஜ் செய்யித் அலி ஸாஹிர் அவர்கள் 11.10.2021 அன்று உத்தியோகபூர்வமாக கௌரவ அல்ஹாஜ் ஹாபீஸ் நசீர் அஹமத் அவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீதி மன்ற தீர்ப்பின் பிரகாரம் பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து அல்ஹாஜ் செய்யித் அலி ஸாஹிர் அவர்களுக்கு அப்பதவி வழங்கி வைக்கப்பட்டது. அத்னைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கை கீழே தர்ப்பட்டுள்ளது.

எல்லாப்புகழும் இறைவனுக்கே

“அல்ஹம்துலில்லாஹ்.”

எமது கட்சியின் தேசிய தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், மற்றும் எங்கள் சார்பாக திறமையுடனும், தெளிவுடனும் வாதங்களை முன்வைத்து நீதியை வென்றெடுத்து தந்த ஜனாதிபதி சட்டத்தரணி கௌரவ சுமந்திரன் அவர்களுக்கும் மற்றும் ஏனைய சட்ட வல்லுனர்களான விரான் குரே , அனி குலநாயகம் , திவ்யா மஸ்கரன்கே மற்றும் சட்டத்தரனி ஐனுல்லாஹ் குழுவினரின் பங்களிப்புடன் உச்ச நீதிமன்றத்தில் கட்சியின் கொள்கையின் அடிப்படையில் நல்லதொரு தீர்வை பெறுவதற்காக ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கி வெற்றியை ஈட்டித்தந்ததையிட்டு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள்,கடந்த தேர்தலில் கட்சிக்காகவும், எனக்காவும் வாக்களித்த மட்டக்களப்பு மாவட்ட வாக்காளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை மீண்டும் தெரிவித்து கொன்டவனாக நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் ,

மக்களின் சேம நலன்களை பேணிப் பாதுகாத்து, அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் வேண்டியவனாகவும், அரசியல் மாற்றங்களால் இடைக்காலங்களில் ஏற்பட்ட இடைவெளிகளை நிரப்பி அனைவரும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் பேதங்கள் அற்றமுறையில் செயலாற்றுவோம் எனவும் வேண்டிக் கொள்கின்றேன்.

என்றும் உங்கள்

அலி ஸாஹிர் மௌலானா…

பிரதி தலைவர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

சேவைகள்

  • அப்போது வீதி அபைவிருத்தி அமைச்சராக இருந்த அல்ஹாஜ்  ஏ.எச்.எம். பௌசி அவர்களின் உதவியுடன் ஏறாவூரின் பிரதான வீதி விஸ்தரிக்கப்பட்டு , பொலிஸ் நிலையச் சந்தியில் மணிக்கூட்டு கோபுரமும் அமைக்கப்பட்டது. அத்துடன் ஏறாவூருக்கென தனியான பஸ் டிப்போ ஒன்றும் அமைக்கப்பட்டது.
  • அத்தோடு அல்ஹாஜ்  ஏ.எச்.எம். பௌசி அவர்கள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது ஏறாவூர் வைத்தியசாலைகான கட்டிட வசதி, தரமுயர்வு என்பவற்றைப் பெற்றுக்கொடுதமை.
  • தபால், தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த அல்ஹாஜ் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்களின் உதவியுடன் ஏறாவூர் தபால் நிலையத்தில் தொலைத் தொடர்பு நிலையமொன்றை அமைத்துக்கொடுத்தார்.
  • மட்/ அலிகார் மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்திக் கொடுத்த பெருமையும் இவருக்குரியது.
  • மட்/அறபா வித்தியாலத்திற்கு மூன்று மாடிக்கட்டிடம், மட்/றகுமானியா வித்தியாலத்ற்கு மாடிக்கட்டிடம், கணனி இயந்திரங்கள், மலசல கூட வசதிகள் என்பவற்றையும், மட்/ மாக்கான் மாக்கார் வித்தியாலத்திற்கு மைதான அபிவிருத்தி மற்றும் பார்வையாளர்கள் அரங்கு என்பனவற்றையும் பெற்றுக்கொடுத்தார்.
  • மட்/ ஐய்யங்க்கேணி அப்துல் காதர்  வித்தியாலயம் மற்றும் மட்/ தாமரைக்கேணி ஸாஹிர் மௌலானா வித்தியாலயம் என்பன இவரது முயற்சியினால் உருவானவையே.

Related Posts