1947.02.05 ஆம் திகதி சீனித்தம்பி மரைக்கார் – அஹமது லெப்பை அலிமாக்கண்டு ஆகியோருக்கு மகனாக பிறந்த இவர் ஆரம்பத்தில் பரம்பரையாக விவசாயத்திலே ஈடுப்பட்டு வந்தார். முதன்முதலாக Brand “TAFRON” உழவு இயந்திரத்தை ஊருக்கு கொண்டுவந்ததன் காரணமாக “TAFRON ஸாலி” என்ற புனைப் பெயரில் பலரால் அழைக்கப்பட்டார்.

1979 விவசாயத்தோடு இணைத்து கட்டட நிர்மான ஒப்பந்தப் பணிகளையும் முன்னெடுத்த இவர் ,1988 இல் ஏறாவூர் பிரதான வீதியில் வர்த்தகத்திலும் ஈடுபட்டார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏறாவூரில் அடையாளப்படுத்துவத்ற்கு முக்கியமான காரண கர்த்தாக்களில் ஒருவராக திகழ்ந்தார்.

பிற்பட்ட காலங்களில் அரச மட்டங்களில் பொதுக் கட்டப்பணிகளை முன்னெடுக்கும் நிறுவனமாக இவரது ” NASEEHA CONSTRUCTION” பெயர் பெற்றிருந்ததோடு தேசியளவில் தனித்துவ இடத்தையும் தக்கவைத்துக் கொண்டது.

Related Posts