மர்ஹூம் எம். ஏ. சீ. ஏ. றஹ்மான் அவர்கள் முஹம்மது அப்துல் காதிர் ஆலிம் அவர்களுக்கும், சின்ன லெப்பை போடியாரின் மகளான் குழந்தையும்மா அவர்களுக்கும் 20.09.1930 இல் மகனாக பிறந்தார்.

தனது ஆரம்ப கல்வியினை மைனர் ரோட் ஆரம்ப பாடசாலையில் ( அறபா வித்தியாலயம்) கற்ற இவர், இடைநிலைக் கல்வியை ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையாக விளங்கும் அன்றைய கனிஷ்ட வித்தியாலத்தில் கற்று அங்கு ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாவது முஸ்லிம் மாணவராக சித்தி பெற்று , காத்தான்குடி மத்திய கல்லூரியில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்தார். ஏறாவூரின் வரலாற்றில் முதன் முதலாக புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய பெருமை இவருக்கே உண்டு.

1947 இல் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு தெரிவு செய்யப்பட்டு பின்னர் தனியார் கல்விக் கூடமான கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் ஆசிரியராக இணைந்து தனது கல்விப்பனியைத் தொடர்ந்தார்.

1963 இல் இன்று கிழக்குப் பல்கலைக்கழகமாக விளங்கும் அன்றைய புகழ் பெற்ற கல்லூரியான  வந்தாறுமூலை மத்திய கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று கல்விச்சேவையைத் தொடர்ந்தார்.

1965 இல் சமூகத்துக்காக சேவை செய்யும் நோக்கில் பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுததந்திரக் கட்சியில் இணைந்து போட்டியிட்டார்.

1967 இல் ஏறாவூர் பட்டின சபைத் தேர்தலில் இவரது தலைமையில் சுயேட்சையில் போட்டியிட்டு அமோக வெற்றியும் பெற்றனர்.

1970 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில்  ஸ்ரீ லங்கா சுதத்ந்திரக் கட்சியின் வேற்பாளராக போட்டியிட்டு 15000 வாகுகள் பெற்றும் துரதிஷ்ட்ட வசமாக பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்படவில்லை.

பின்பு கிழக்கிலங்கை கடதாசிக் கூட்டுத்தாபனத்தின்  நிறைவேற்று இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.

03.05.2019 அன்று தனது 89 வது வயதில் வபாத்தானார்.

சேவைகள்

  • ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கான நிலம்
  • ஏறாவூர் றஹ்மானியா , அல் அஸ்ஹர் , அல் ஜிப்ரியா விதியாலயத்திற்கான அமைவிட நிலங்கள் சுவீகரிக்கப்பட்டமை.
  • ஏறாவூரில் விவசாய விஸ்தரிப்பு நிலையம் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டமை

Related Posts