ஏப்ரல் 16, 1961 செய்னுலாப்தீன் ஆலிம் – தம்பதியினருக்கு புதல்வராகப் பிறந்தார். எகிப்தின் தலைநகரான  கெய்ரோ ஜன்சம்சு பல்கலைக்கழகத்திலும், சவூதி அரேபியாவிலுள்ள பெற்றோலியப் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்று மண் பொறியியலில் பட்டம் பெற்றார்.

அரசியலில் நுழைந்த நசீர் அஹமத் அவர்கள் ஆரம்பத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பாளராகப் பணியாற்றினார்.

பின்னர் 2005 முதல் 2009 வரையில் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றினார்.

2012, செப்டம்பர் 8 இல் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளராகப் போட்டியிட்டு 11,401 விருப்பு வாக்குகள் பெற்று மாகாணசபை உறுப்பினரானார்

முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே ஒரு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இவராவார்.

சுமார் இரண்டு ஆண்டுகளின் பின்னர் 2015 பெப்ரவரி 6 இல் முஸ்லிம் காங்கிரசின் ஹாபிஸ் நசீர் அகமட் கிழக்கு மாகாணத்தின் 3-ஆவது முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

நசீர் அகமது 2020இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் முசுலிம் காங்கிரசின் சார்பாக போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு  முதல் தடவையாகத் தெரிவு செய்யப்பட்டார்.

06.10.2023 திகதிய உயர் நீதிமன்றத்தின் வரலாறு படைத்த தீர்ப்பின் பிரகாரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹாபீஸ் நசீர் அஹமட் வகித்த சுற்றாடல் அமைச்சுப் பதவி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டு வரப்பட்டு, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது ( அதி விசேட வர்த்தமானி-இணைக்கப்பட்டுள்ளது) , அத்தோடு அவ்வெற்றிடதிற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக கௌரவ செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் தெரிவானார்கள்.

சேவைகள்

Related Posts