ஏறாவூர் நகர சபை

125 ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு மாகாணத்தில் காணப்பட்ட 5 சனிடரி சபைகளில் ஒன்றான ஏறாவூர் நகர சபை உருவான படித்தரம் பற்றிய குறிப்பு

இலங்கை பிரித்தானியரின் ஆட்சியில் இருந்த காலத்தில் மகாராணியின் பிரதிநிதியான கௌரவ ஆளுநரின் பிரகடனத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தின் ஏறாவூர் உட்பட 5 பிரதேசங்கள்

  1. 02.19ஆம் திகதியிலிருந்து செயற்படத்தக்கதாக சனிடரி சபைகளாக குடியேற்ற செயலாளர் அவர்களினால் 5459 ஆம் இலக்க அரச வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்பட்டது.

1897ஆம் ஆண்டு பெப்ரவரி 19ஆம் திகதி வெளிவந்த சிலோன் அரசாங்க வர்த்தமானி, அன்றைய குடியேற்ற செயலாளர் திரு ஈ நோயல் வர்கேர் அவர்கள் பிரித்தானிய ஆளுநரின் ஆணைப்படி பிரகடனம் ஒன்றை வெளியிட்டார்.

அப்பிரகடனத்தின் படி 1892ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க “சிறிய நகரங்கள் சனிட்டரி கட்டளைச் சட்டத்தின்” 2ஆம் பிரிவிற்கு இணங்க சனிட்டரி சபைகள் என்ற அந்தஸ்துடன் கிழக்கு மாகாணத்தின் பின்வரும் கிராமங்களான,

  1. ஏறாவூர், 2.காத்தான்குடி, 3.சாய்ந்தமருது, 4.கல்முனை மற்றும்
  2. சம்மாந்துறை போன்றன
    அன்றைய நிறைவேற்று சபையின் ஆலோசனைக்கு அமைய ஆளுநர் அவர்களின் செயலாளர் அவர்களினால் இலங்கை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் பின் 1920.03.12 ஆம் திகதி 7091 ஆம் இலக்க அரச வர்த்தமானி மூலம் சனிட்டரி சபை நகர் ஏறாவூர் பரிமாற்றம் அடைந்துள்ளது.

1946.03. 22 ஆம் திகதி 9532 ஆம் இலக்க வர்தமானி மூலம் ஏறாவூர் நகர் பட்டிணசபையாக மாற்றம் அடைந்துள்ளது .

அதன்பின் 1987.05.12 ஆம் திகதிய 453/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் ஏறாவூர் நகர பிரதேச சபையாக 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் கட்டளை சட்டத்தின் மூலம் மாற்றம் அடைந்துள்ளது.

2011.01.05. ஆம் திகதிய 1687/23 ஆம் இலக்க அதி விஷேட வர்த்தமானி மூலமர ஏறாவூர் நகர சபையாக தர முயர்த்தப்பட்டுள்ளது .

குறிப்பு 1897.02.19 ஆம் திகதிய 5459 ஆம் இலக்க வர்த்தமானியில் எல்லையாக வடக்கு – ஐயண் கேணி காடு, கிழக்கு – ஆறுமுகத்தான் குடியிருப்பு கிராமம் , தெற்கு – ஏறி , மேற்கு -எல்லை வீதி.

ஜனாப்.எச்.எம்.நியாஸ்

ஏறாவூர் நகர பிரதேச செயலகம்

ஏறாவூர் பொலிஸ் நிலையம்

சுற்றுலா நீதிவான் நீதி மன்றம் – ஏறாவூர்.

அஞ்சல் அலுவலகம் – ஏறாவூர்

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் – ஏறாவூர்

zonal educational office Eravur

கலாசார மத்திய நிலையம் – ஏறாவூர்

புகையிரத நிலையம் ஏறாவூர்

Related Posts